வெள்ளி, 28 நவம்பர், 2014

ஈசனை நேரில் காண

ஈசனை நேரில் காண,மற்றும்
எல்லாவித தீவினைகளும் நீங்க பெற்று பதி புண்ணியம் அளிக்கும் அற்புதப் பதிகம் 

திருச்சிற்றம்பலம் 

திருக்கைலாயம்

போற்றித் திருத்தாண்டகம்



1.வே(ற்)ற்று ஆகி விண் ஆகி நின்றாய், போற்றி!
     மீளாமே ஆள் என்னைக் கொண்டாய், போற்றி!
ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய், போற்றி!
                 ஓவாத சத்தத்து ஒலியே, போற்றி!
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய், போற்றி!
       ஆறு அங்கம் நால்வேதம் ஆனாய், போற்றி!
காற்று ஆகி எங்கும் கலந்தாய், போற்றி!
             கயிலை மலையானே, போற்றி போற்றி!.

2.பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி! பிறவி
                    அறுக்கும் பிரானே, போற்றி!
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய், போற்றி! மருவி
                 என் சிந்தை புகுந்தாய், போற்றி!
பொய்ச் சார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
         போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
கச்சு ஆக நாகம் அசைத்தாய், போற்றி! கயிலை
                   மலையானே, போற்றி போற்றி!.

3.மருவார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி! மருவி
                 என் சிந்தை புகுந்தாய், போற்றி!
உரு ஆகி என்னைப் படைத்தாய், போற்றி! உள்
               ஆவி வாங்கி ஒளித்தாய், போற்றி!
திரு ஆகி நின்ற திறமே, போற்றி! தேசம்
                       பரவப்படுவாய், போற்றி!
கரு ஆகி ஓடும் முகிலே, போற்றி! கயிலை
                  மலையானே, போற்றி போற்றி!.

4.வானத்தார் போற்றும் மருந்தே, போற்றி! வந்து
             என்தன் சிந்தை புகுந்தாய், போற்றி!
ஊனத்தை நீக்கும் உடலே, போற்றி! ஓங்கி
               அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி!
தேன(த்)த்தை வார்த்த தெளிவே, போற்றி!
        தேவர்க்கும் தேவனாய் நின்றாய், போற்றி!
கானத் தீ ஆடல் உகந்தாய், போற்றி!
           கயிலை மலையானே, போற்றி போற்றி!.


5.ஊர் ஆகி நின்ற உலகே, போற்றி! ஓங்கி
             அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி! 
பேர் ஆகி எங்கும் பரந்தாய், போற்றி!
      பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி! 
நீர் ஆவி ஆன நிழலே, போற்றி! நேர்வார்
               ஒருவரையும் இல்லாய், போற்றி! 
கார் ஆகி நின்ற முகிலே, போற்றி! கயிலை
                மலையானே, போற்றி போற்றி!.



6.சில் உரு ஆய்ச் சென்று திரண்டாய், போற்றி!
               தேவர் அறியாத தேவே, போற்றி! 
புல் உயிர்க்கும் பூட்சி புணர்த்தாய், போற்றி!
        போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி! 
பல் உயிர் ஆய்ப் பார்தோறும் நின்றாய், போற்றி!
               பற்றி உலகை விடாதாய், போற்றி! 
கல் உயிர் ஆய் நின்ற கனலே, போற்றி! கயிலை
                  மலையானே, போற்றி போற்றி!.



7.பண்ணின் இசை ஆகி நின்றாய், போற்றி!
          பாவிப்பார் பாவம் அறுப்பாய், போற்றி! 
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய், போற்றி!
           என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி! 
விண்ணும் நிலனும் தீ ஆனாய், போற்றி!
     மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய், போற்றி! 
கண்ணின் மணி ஆகி நின்றாய், போற்றி!
           கயிலை மலையானே, போற்றி போற்றி!.



8.இமையாது உயிராது இருந்தாய், போற்றி! என்
              சிந்தை நீங்கா இறைவா, போற்றி! 
உமை பாகம் ஆகத்து அணைத்தாய், போற்றி!
             ஊழி ஏழ் ஆன ஒருவா, போற்றி! 
அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய், போற்றி!
           ஆதி புராணனாய் நின்றாய், போற்றி! 
கமை ஆகி நின்ற கனலே, போற்றி! கயிலை
                மலையானே, போற்றி போற்றி!.



9.மூவாய், பிறவாய், இறவாய், போற்றி! முன்னமே
                  தோன்றி முளைத்தாய், போற்றி! 
தேவாதி தேவர் தொழும் தேவே, போற்றி!
           சென்று ஏறி எங்கும் பரந்தாய், போற்றி! 
ஆவா! அடியேனுக்கு எல்லாம், போற்றி! அல்லல்
                      நலிய அலந்தேன், போற்றி! 
காவாய்! கனகத்திரளே, போற்றி! கயிலை
                   மலையானே, போற்றி போற்றி!.




10.நெடிய விசும்போடு கண்ணே, போற்றி! நீள
                 அகலம் உடையாய், போற்றி!
அடியும் முடியும் இகலி, போற்றி! அங்கு ஒன்று
                அறியாமை நின்றாய், போற்றி!
கொடிய வன் கூற்றம் உதைத்தாய், போற்றி!
    கோயிலா என் சிந்தை கொண்டாய், போற்றி!
கடிய உருமொடு மின்னே, போற்றி! கயிலை
                மலையானே, போற்றி போற்றி!.


 11.உண்ணாது உறங்காது இருந்தாய், போற்றி!
          ஓதாதே வேதம் உணர்ந்தாய், போற்றி! 
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி!
    இறை விரலால் வைத்து உகந்த ஈசா, போற்றி! 
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய், போற்றி!
        பண்டே என் சிந்தை புகுந்தாய், போற்றி! 
கண் ஆய் உலகுக்கு நின்றாய், போற்றி!
          கயிலை மலையானே, போற்றி போற்றி!.
  
திருச்சிற்றம்பலம் 

வியாழன், 27 நவம்பர், 2014

தடைபட்ட திருமணம் நல்ல முறையில் நடக்கவும் ,சர்ப்ப தோஷம் நீங்கவும் பாட வேண்டிய பாடல்

 
தடைபட்ட  திருமணம் நல்ல முறையில் நடக்கவும் ,சர்ப்ப தோஷம்  நீங்கவும்  பாட வேண்டிய பாடல் 

திருச்சிற்றம்பலம் 

திருமருகல் - திருஞானசம்பந்தர் 


1.சடையாய்! எனுமால்; "சரண் நீ!" எனுமால்;

"விடையாய்!" எனுமால்; வெருவா விழுமால்; 
மடை ஆர் குவளை மலரும் மருகல் 
உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே?

2.சிந்தாய்! எனுமால்; "சிவனே!" எனுமால்;

"முந்தாய்!" எனுமால்; "முதல்வா!" எனுமால்; 
கொந்து ஆர் குவளை குலவும் மருகல் 
எந்தாய்! தகுமோ, இவள் ஏசறவே?

3.அறை ஆர் கழலும், அழல் வாய் அரவும்,
பிறை ஆர் சடையும், உடையாய்! பெரிய 
மறையார் மருகல் மகிழ்வாய்! இவளை 
இறை ஆர் வளை கொண்டு, எழில் வவ்வினையே?

4.ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம் 
பலி நீ திரிவாய்! பழி இல் புகழாய்! 
மலி நீர் மருகல் மகிழ்வாய்! இவளை 
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே?

5.துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீலகண்டம்(ம்) உடையாய், மருகல்!
கணி நீலவண்டு ஆர் குழலாள் இவள்தன்
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே?

6.பலரும் பரவப்படுவாய்! சடைமேல்
மலரும் பிறை ஒன்று உடையாய், மருகல்!
புலரும்தனையும் துயிலாள், புடை போந்து
அலரும் படுமோ, அடியாள் இவளே


7.வழுவாள்; "பெருமான்கழல் வாழ்க!" எனா 
எழுவாள்; நினைவாள், இரவும் பகலும்; 
மழுவாள் உடையாய்! மருகல் பெருமான்! 
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே?


8.இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப, 
துலங்க விரல் ஊன்றலும், தோன்றலனாய்; 
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்! 
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே?


9.எரி ஆர் சடையும், அடியும், இருவர் 
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே! 
மரியார் பிரியா மருகல் பெருமான்! 
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே?


10.அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும் 
நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்; 

மறி ஏந்து கையாய்! மருகல் பெருமான்! 
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே?

11.வயஞானம் வல்லார் மருகல் பெருமான் 
உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால், 
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார், 
வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே.

திருச்சிற்றம்பலம் 

வெள்ளி, 14 நவம்பர், 2014

சொந்த வீடு கட்ட பாட வேண்டிய அருமையான திருப்புகழ் (5 வித வரம்களை ஒரே பாடல் படிப்பதன் மூலம் பெறலாம் )

 சொந்த வீடு கட்ட பாட வேண்டிய அருமையான திருப்புகழ் பெறலாம் 

சிறுவாபுரி 





அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
     அண்டர்மன மகிழ்மீற ...... அருளாலே

அந்தரியொ டு உடனாடு சங்கரனு மகிழ்கூர
     ஐங்கரனும்   உமையாளு ...... மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
     மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
     மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்

புண்டரிக விழியாள  அண்டர்மகள் மணவாளா
     புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
     பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
     தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா

சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
     தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.


ஒரே பாடல் மூலம் 5 பலன் தரும் திருப்புகழ் ..அருணகிரியார் பாடியுள்ளார் ..

மேலும் இப்பாடலில் மகிழ்மீற,மகிழ்கூர,மகிழ்வாக,மின்பமுற என்று 4 இடங்களில் மகிழ்ச்சி பற்றி பாடியிருப்பதால் இத் திருப்புகழ மகிழ்ச்சி திருப்புகழ் என்று அழைக்கப்படுகிறது ......

இத் திருப்புகழை  மனம் ஒன்றி  சிறுவை கோனே ! பாலசுப்ரமணிய பெருமானே ! என்று மனமுருகி பாடினால் ,
  • 1,இம்மையில் பெண்ணுக்கு திருமணம் 
  • 2,தொழில் வெற்றி 
  • 3,வீடு 
  • 4,செல்வம் 
  • 5,மோட்சம்


ஆகிய 5 வித பலன்களை சிறுவாபுரி முருகன் நமக்கு  அளிப்பார்.
   
மேலும் சிறுவாபுரி முருகனை நாம் நினைத்தா லே போதும்..இப்பாடலில் சந்ததமும் அடியார்கள்  சிந்தையது குடியான என்று கடைசி வரிகளில் நம் அருணகிரியார் பாடி இருக்கிறார் .
சிந்தையில் சிறுவை முருகனை  நினைத்தாலே போதுமாம்..... திருவண்ணமலையை எப்படி நினைக்க முக்தியோ  அதே போல் நம் சிறுவாபுரி முருகனும்.....

அனுதினமும்  இப்பாடல் படித்து முருகன் அருளைப் பெறுவோமாக!!!!!!!!!!!!!

திங்கள், 10 நவம்பர், 2014

பகைமை தீர திருப்புகழில் பாடல்


பகைமை தீர திருப்புகழில் பாடல் 

திருத்தணிகை


சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
     செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
     திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
     நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்

நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
     நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
     தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி

தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
     தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
     சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
     திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...