ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

முக்தி அடைய பாட வேண்டிய திருப்புகழ்


முக்தி அடைய பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய அவிநாசி திருப்புகழ் 


இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்

பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே

குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா

அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

புதன், 11 செப்டம்பர், 2019

இழந்த செல்வம் அத்தனையும் மீட்கும் அதி அற்புத பதிகம்

இழந்த செல்வம் அத்தனையும் மீட்கும் அதி அற்புத பதிகம் 

திருத் தென்குரங்காடுதுறை - இந்தளம் 


குறிப்பு : (சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம்  செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.)

 திருச்சிற்றம்பலம் 

1.பரவக் கெடும், வல்வினை பாரிடம் சூழ, 
இரவில் புறங்காட்டுஇடை நின்று எரிஆடி; 
அரவச் சடை அந்தணன்; மேய, அழகு ஆர் 
குரவப்பொழில் சூழ், குரங்காடுதுறையே.
 
2.விண்டார் புரம்மூன்றும் எரித்த விமலன்,
இண்டு ஆர் புறங்காட்டுஇடை நின்று எரி ஆடி, 
வண்டு ஆர் கருமென்குழல் மங்கை ஒர்பாகம் 
கொண்டான், நகர்போல் குரங்காடுதுறையே.
 
3.நிறைவு இல் புறங்காட்டுஇடை, நேரிழையோடும் 
இறைவு இல் எரியான், மழு ஏந்தி நின்று ஆடி; 
மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும் 
குறைவுஇல்லவன்; ஊர் குரங்காடுதுறையே.

 
4.விழிக்கும் நுதல்மேல் ஒரு வெண்பிறை சூடி,
தெழிக்கும் புறங்காட்டுஇடைச் சேர்ந்து எரிஆடி, 
பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன், ஊர் பொன் 
கொழிக்கும் புனல் சூழ் குரங்காடுதுறையே.
 
5.நீறு ஆர்தரு மேனியன், நெற்றி ஓர் கண்ணன்,
ஏறு ஆர் கொடி எம் இறை, ஈண்டு எரிஆடி, 
ஆறு ஆர் சடை அந்தணன், ஆயிழையாள் ஓர் 
கூறான், நகர்போல் குரங்காடுதுறையே.

6.நளிரும் மலர்க்கொன்றையும் நாறு கரந்தைத் 
துளிரும் சுலவி, சுடுகாட்டு எரிஆடி, 
மிளிரும் அரவு ஆர்த்தவன் மேவிய கோயில் 
குளிரும் புனல் சூழ் குரங்காடுதுறையே.

7.பழகும் வினை தீர்ப்பவன்; பார்ப்பதியோடும்,
முழவம் குழல் மொந்தை முழங்க, எரிஆடும் 
அழகன்; அயில்மூஇலைவேல் வலன் ஏந்தும் 
குழகன்; நகர்போல் குரங்காடுதுறையே.

8.வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி ஒல்க, 
நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம் 
கரை ஆர்ந்து இழி காவிரிக் கோலக் கரைமேல், 
குரை ஆர் பொழில் சூழ், குரங்காடுதுறையே.
 
9.நெடியானொடு நான்முகனும் நினைவு ஒண்ணாப் 
படிஆகிய பண்டங்கன், நின்று எரிஆடி, 
செடி ஆர் தலை ஏந்திய செங்கண் வெள் ஏற்றின் 
கொடியான், நகர்போல் குரங்காடுதுறையே.
 
10.துவர் ஆடையர், வேடம் அலாச் சமண்கையர்,
கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம் 
நவை ஆர் மணி, பொன், அகில், சந்தனம், உந்திக் 
குவை ஆர் கரை சேர் குரங்காடுதுறையே.

11.நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன்,
கொல் ஏறு உடையான் குரங்காடுதுறைமேல் 
சொல் ஆர் தமிழ்மாலைபத்தும், தொழுது ஏத்த 
வல்லார் அவர், வானவரோடு உறைவாரே.

 திருச்சிற்றம்பலம் 

நாம் கேட்கும் வரம் நல்கும் திருப்புகழ்

நாம் கேட்கும்  வரம் நல்கும் திருப்புகழ் 

(வரம் தரும் திருப்புகழ்)



அருணகிரிநாதர் அருளிய சிறுவை திருப்புகழ் 

சிறுவாபுரி 


பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து
     பிணிக ளான துயரு ழன்று ...... தடுமாறிப்

பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி
     பிடிப டாத ஜனன நம்பி ...... யழியாதே

நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த
     நளின பாத மெனது சிந்தை ...... யகலாதே

நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி
     நலன தாக அடிய னென்று ...... பெறுவேனோ

பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று
     பொருநி சாச ரனைநி னைந்து ...... வினைநாடிப்

பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து
     புளக மேவ தமிழ்பு னைந்த ...... முருகோனே

சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல்
     சிலையி ராம னுடனெ திர்ந்து ...... சமராடிச்

செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த
     சிறுவை மேவி வரமி குந்த ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

தீராத நோய்கள் (உடல் நோய்,மன நோய்) அனைத்தும் தீர பாட வேண்டிய திருப்புகழ்

தீராத நோய்கள்  (உடல் நோய்,மன நோய்) அனைத்தும் தீர பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருவருணை திருப்புகழ் 

திருவண்ணாமலை 

இருவர் மயலோ அமளி விதமோ
     எனென செயலோ ...... அணுகாத

இருடி அயன்மா லமர ரடியா
     ரிசையு மொலிதா ...... னிவைகேளா

தொருவ னடியே னலறு மொழிதா
     னொருவர் பரிவாய் ...... மொழிவாரோ

உனது பததூள் புவன கிரிதா
     னுனது கிருபா ...... கரமேதோ

பரம குருவா யணுவி லசைவாய்
     பவன முதலா ...... கியபூதப்

படையு முடையாய் சகல வடிவாய்
     பழைய வடிவா ...... கியவேலா

அரியு மயனோ டபய மெனவே
     அயிலை யிருள்மேல் ...... விடுவோனே

அடிமை கொடுநோய் பொடிகள் படவே
     அருண கிரிவாழ் ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

திங்கள், 9 செப்டம்பர், 2019

தீயவை நீக்கும் திருப்புகழ்

தீயவை நீக்கும் திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய சிறுவாபுரி திருப்புகழ் 



(குறிப்பு : நம் இடர் களைந்து தீயவனவற்றை அடியோடு அழிக்கும் அற்புத திருப்புகழ்)

வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள்
     காத லின்பொருள் மேவின பாதகர்
          வீணில் விண்டுள நாடிய ரூமைகள் ...... விலைகூறி

வேளை யென்பதி லாவசை பேசியர்
     வேசி யென்பவ ராமிசை மோகிகள்
          மீது நெஞ்சழி யாசையி லேயுழல் ...... சிறியேனும்

மால யன்பர னாரிமை யோர்முனி
     வோர் புரந்தர னாதிய ரேதொழ
          மாத வம்பெறு தாளிணை யேதின ...... மறவாதே

வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி
     யேவி ரும்பி வினாவுட னேதொழ
          வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர் ...... களைவாயே

நீல சுந்தரி கோமளி யாமளி
     நாட கம்பயில் நாரணி பூரணி
          நீடு பஞ்சவி சூலினி மாலினி ...... யுமைகாளி

நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ
     காம சுந்தரி யேதரு பாலக
          நீர்பொ ருஞ்சடை யாரருள் தேசிக ...... முருகேச

ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற
     மாநி லங்களெ லாநிலை யேதரு
          ஆய னந்திரு வூரக மால்திரு ...... மருகோனே

ஆட கம்பயில் கோபுர மாமதி
     லால யம்பல வீதியு மேநிறை
          வான தென்சிறு வாபுரி மேவிய ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

2.வேண்டிய போது அடியவர்களுக்கு வேண்டிய அத்துனையும் நல்கும் அதி அற்புத திருப்புகழ்

2.வேண்டிய  போது அடியவர்களுக்கு வேண்டிய அத்துனையும் நல்கும் அதி அற்புத திருப்புகழ்

அருணகிரிநாதர் அருளிய பழனி திருப்புகழ் 

வரதா மணிநீ ...... யெனவோரில்
     வருகா தெதுதா ...... னதில்வாரா

திரதா திகளால் ...... நவலோக
     மிடவே கரியா ...... மிதிலேது

சரதா மறையோ ...... தயன்மாலும்
     சகலா கமநூ ...... லறியாத

பரதே வதையாள் ...... தருசேயே

     பழனா புரிவாழ் ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

1.வேண்டிய போது அடியவர்களுக்கு வேண்டிய அத்துனையும் நல்கும் அதி அற்புத திருப்புகழ்

1.வேண்டிய  போது அடியவர்களுக்கு வேண்டிய அத்துனையும் நல்கும் அதி அற்புத திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருவேங்கட திருப்புகழ் 

சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில
     மூண்டவி யாதசம ...... யவிரோத

சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்
     தாந்துணை யாவரென ...... மடவார்மேல்

ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு
     தோய்ந்துரு காவறிவு ...... தடுமாறி

ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்
     யான்தனி போய்விடுவ ...... தியல்போதான்

காந்தளி னானகர மான்தரு கானமயில்
     காந்தவி சாகசர ...... வணவேளே

காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி
     யாண்டகை யேயிபமின் ...... மணவாளா

வேந்தகு மாரகுக சேந்தம யூரவட
     வேங்கட மாமலையி ...... லுறைவோனே

வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
     வேண்டவெ றாதுதவு ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

வியாழன், 5 செப்டம்பர், 2019

கண்களில் உள்ள குறைபாடுகள் நீங்கி தெளிவான பார்வையை பெற பாட வேண்டிய திருப்புகழ்


கண்களில் உள்ள குறைபாடுகள் நீங்கி தெளிவான பார்வையை பெற பாட வேண்டிய திருப்புகழ்

அருணகிரிநாதர் அருளிய எண்கண் திருப்புகழ்



சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு
     சண்ப கஞ்செ றிந்தி லங்கு ...... திரடோளுந்

தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று
     சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச ...... மயிலேறித்

திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று
     சென்ற சைந்து கந்து வந்து ...... க்ருபையோடே

சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து
     செம்ப தம்ப ணிந்தி ரென்று ...... மொழிவாயே

அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன்
     அங்க முங்கு லைந்த ரங்கொள் ...... பொடியாக

அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று
     அம்பு கொண்டு வென்ற கொண்டல் ...... மருகோனே

இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி
     டும்ப ரன்ற னன்பில் வந்த ...... குமரேசா

இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்பு
     எண்க ணங்க மர்ந்தி ருந்த ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

புதன், 4 செப்டம்பர், 2019

கந்தர் அலங்காரத்தில் சில முக்கிய தினசரி பராயணப்பாடல்கள்

கந்தர் அலங்காரத்தில் சில முக்கிய தினசரி பராயணப்பாடல்கள் 

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரத்தில் சில பாடல்கள் (பராயணத்திற்குரியது)

குறிப்பு :(அடியவர்கள் தினமும் இந்த குறிப்பிட்ட பாடலை பாராயணம் செய்தால் முருகன் அருள் முன் நிற்கும்)


நம் தலைஎழுத்தை  மாற்றி அமைக்க

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.

மயிலின் ஆற்றல் 

குசை நெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர் குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின் கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு அடியில் எண்-
திசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டது.

எம பயம் அற 

 ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து எனக்குக்
 காலையும் மாலையும் முன்னிற்குமே கந்தவேள் மருங்கில்
 சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்த செச்சை
  மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே.


பிறவிப்பெருங்கடலை கடக்க 

முடியாப் பிறவிக் கடலில் புகார், முழுதும் கெடுக்கும்
மிடியால் படியில் விதனப்படார், வெற்றிவேல் பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப்
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே.

முருகனே துணை 

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.

முருகனை மறவாதவர்களுக்கு எந்த குறையும் வராது 

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.

மயிலின் ஆற்றல் 

தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில் நீ
வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே.


மேற்சொன்னவைகளில் ஏதேனும் ஒன்று படித்தால் அதற்குரிய பலன் இந்த இறுதி பாடல் 

நூற்பயன் 

சலங்காணும் வேந்தர்தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்
அலங்கார நூற்று ளொருகவிதான்கற் றறிந்தவரே.

விளக்கம் :

(சினம் கொள்கின்ற அரசர்களுக்கும் அஞ்சமாட்டார்கள்; இயமனுடைய
போருக்கும் அஞ்சமாட்டார்கள்; இருண்ட நரகக் குழியை அடைய
மாட்டார்கள்; கொடிய நோய்களால் துன்புறமாட்டார்கள்; புலி கரடி யானை
முதலிய கொடிய விலங்குகள் குறித்தும் மனம் கலங்க மாட்டார்கள்;
கந்தப்பெருமானது பெருமையைக் கூறும் நல்ல நூலாகிய
கந்தரலங்காரத்தின் நூறு திருப்பாடல்களுள் ஒரு திருப்பாடலையேனும்
கற்று அதன் மெய்ப்பொருளை உணர்ந்தவர்களே அவர்களாவர். )






செவ்வாய், 3 செப்டம்பர், 2019

சிறை வாசத்திலிருந்து விடுபடவும், பகைவர்களால் ஏற்படும் தொல்லை நீங்கவும் பாட வேண்டிய பதிகம்

சிறை வாசத்திலிருந்து விடுபடவும், பகைவர்களால் ஏற்படும் தொல்லை நீங்கவும் பாட வேண்டிய பதிகம் 

திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் 

திருஆலவாய் - கௌசிகம் 

திருச்சிற்றம்பலம் 

1.செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!      
 
2.சித்தனே! திரு ஆலவாய் மேவிய
அத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பத்தி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!      
 
3.தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்
சொக்கனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று, பாண்டியற்கு ஆகவே!      
 
4.சிட்டனே! திரு ஆலவாய் மேவிய
அட்டமூர்த்தியனே! “அஞ்சல்!” என்று அருள்
துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பட்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!      
 
5.நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய்
அண்ணலே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எண் இலா அமணர் கொளுவும் சுடர்
பண் இயல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே!     
 
6.“தஞ்சம்!” என்று உன் சரண் புகுந்தேனையும்,
“அஞ்சல்!” என்று அருள், ஆலவாய் அண்ணலே!
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!      
 
7.செங்கண் வெள்விடையாய்! திரு ஆலவாய்
அங்கணா! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;
கங்குலார் அமண்கையர் இடும் கனல்,
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே!      
 
8.தூர்த்தன் வீரம் தொலைத்து அருள் ஆலவாய்
ஆத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர்
பார்த்திவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!      
 
9.தாவினான், அயன்தான் அறியா வகை
மேவினாய்! திரு ஆலவாயாய், அருள்
தூ இலா அமணர் கொளுவும் சுடர்
பாவினான், தென்னன், பாண்டியற்கு ஆகவே!      
 
10.எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;
குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பண்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!      
 
11.அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால்,
வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு
ஒப்ப, ஞானசம்பந்தன் உரைபத்தும்,
செப்ப வல்லவர் தீது இலாச் செல்வரே.     

திருச்சிற்றம்பலம் 

 

கோபம் அகல பாட வேண்டிய திருப்புகழ்

கோபம் அகல பாட  வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய விராலிமலை திருப்புகழ் 

மாலாசை கோப மோயாதெ நாளு
     மாயா விகார ...... வழியேசெல்

மாபாவி காளி தானேனு நாத
     மாதா பிதாவு ...... மினிநீயே

நாலான வேத நூலாக மாதி
     நானோதி னேனு ...... மிலைவீணே

நாள்போய் விடாம லாறாறு மீதில்
     ஞானோப தேச ...... மருள்வாயே

பாலா கலார ஆமோத லேப
     பாடீர வாக ...... அணிமீதே

பாதாள பூமி யாதார மீன
     பானீய மேலை ...... வயலூரா

வேலா விராலி வாழ்வே சமூக
     வேதாள பூத ...... பதிசேயே

வீரா கடோர சூராரி யேசெ
     வேளே சுரேசர் ...... பெருமாளே.


"வேலும்  மயிலும் சேவலும் துணை"



அடியவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற பாட வேண்டிய திருப்புகழ்

அடியவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருவக்கரை திருப்புகழ் 

கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
     தொழிவ துனைச்சிறி ...... துரையாதே

கருவழிதத்திய மடுவ தனிற்புகு
     கடுநர குக்கிடை ...... யிடைவீழா

உலகு தனிற்பல பிறவி தரித்தற
     வுழல்வது விட்டினி ...... யடிநாயேன்

உனதடி மைத்திரள் அதனினு முட்பட
     வுபய மலர்ப்பத ...... மருள்வாயே

குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
     நிசிசர னைப்பொரு ...... மயில்வீரா

குணதர வித்தக குமர புனத்திடை
     குறமக ளைப்புணர் ...... மணிமார்பா

அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
     மணிதிரு வக்கரை ...... யுறைவோனே

அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
     அவைதரு வித்தருள் ...... பெருமாளே.


"வேலும் மயிலும் சேவலும் துணை"

தினசரி வாழ்க்கையில் இன்பம் பெற பாட வேண்டிய திருப்புகழ்

தினசரி வாழ்க்கையில் இன்பம் பெற பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய மயிலை திருப்புகழ் 


அறமி லாவதி பாதக வஞ்சத் ...... தொழிலாலே
அடிய னேன்மெலி வாகிம னஞ்சற் ...... றிளையாதே
திறல்கு லாவிய சேவடி வந்தித் ...... தருள்கூடத்
தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் ...... தருவாயே
விறல்நி சாசரர் சேனைக ளஞ்சப் ...... பொரும்வேலா
விமல மாதபி ராமித ருஞ்செய்ப் ...... புதல்வோனே
மறவர் வாணுதல் வேடைகொ ளும்பொற் ...... புயவீரா
மயிலை மாநகர் மேவிய கந்தப் ...... பெருமாளே.


"வேலும் மயிலும் சேவலும் துணை "

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...