ஞாயிறு, 8 ஜனவரி, 2023

சிறப்பான வாழ்கை வாழ பாட வேண்டிய அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்

 சிறப்பான வாழ்கை வாழ பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 

"வேலும் மயிலும் சேவலும் துணை"

மதுரை

ஆனைமுக வற்கு நேரிளைய பத்த

     ஆறுமுக வித்த ...... கமரேசா


ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்

     ஆரணமு ரைத்த ...... குருநாதா


தானவர் குலத்தை வாள்கொடு துணித்த

     சால்சதுர் மிகுத்த ...... திறல்வீரா


தாளிணைக ளுற்று மேவியப தத்தில்

     வாழ்வொடு சிறக்க ...... அருள்வாயே


வானெழு புவிக்கு மாலுமய னுக்கும்

     யாவரொரு வர்க்கு ...... மறியாத


மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க

     மாமயில் நடத்து ...... முருகோனே


தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி

     சேரமரு வுற்ற ...... திரள்தோளா


தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை

     வேல்கொடு தணித்த ...... பெருமாளே.


"வேலும் மயிலும் சேவலும் துணை"


வியாழன், 5 ஜனவரி, 2023

தோல் வியாதிகள் மற்றும் வெண்படை போன்ற தோல் நோய்கள் நீங்க பாட வேண்டிய பதிகம்

 தோல் வியாதிகள் மற்றும் வெண்படை போன்ற தோல் நோய்கள் நீங்க பாட வேண்டிய பதிகம் 

திருநறையூர்ச்சித்தீச்சரம்


இறைவர் : சித்தநாதேசுவரர், வேதேசுவரர், நரேசுவரர்

இறைவியார்  : அழகம்மை, சௌந்தர நாயகி


குறிப்பு : (கோரக்க சித்தர் என்பவர் தனக்கு ஏற்பட்ட தோல் வியாதி நீங்க இத்தலத்தில் இறைவனை வழிபட்டார். இறைவன் அவருக்கு அருள் புரிய, சித்தர் தனது நோய் நீங்கப் பெற்றார். சித்தருக்கு அருளியதால் இறைவன் பெயர் சித்தநாதேஸ்வரர் என்றும் ஆலயம் சித்தீச்சரம் என்றும் வழங்குகிறது.)

திருஞானசம்பந்தர் அருளிய 3- ம் திருமுறை 

 திருச்சிற்றம்பலம்  


1.ஊர் உலாவு பலி கொண்டு, உலகு ஏத்த,

நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல்,

சீர் உலாவும் மறையோர் நறையூரில்,

சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!


2.காடும் நாடும் கலக்கப் பலி நண்ணி,

ஓடு கங்கை ஒளிர் புன் சடை தாழ,

வீடும் ஆக மறையோர் நறையூரில்,

நீடும் சித்தீச்சுரமே நினை நெஞ்சே!

   

3.கல்வியாளர், கனகம் அழல் மேனி

புல்கு கங்கை புரி புன் சடையான் ஊர்,

மல்கு திங்கள் பொழில் சூழ், நறையூரில்

செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!

   

4.நீட வல்ல நிமிர் புன்சடை தாழ

ஆட வல்ல அடிகள் இடம் ஆகும்,

பாடல் வண்டு பயிலும், நறையூரில்

சேடர் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

   

5.உம்பராலும் உலகின் அவராலும்

தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர்,

நண்பு உலாவும் மறையோர், நறையூரில்

செம்பொன் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

   

6.கூர் உலாவு படையான், விடை ஏறி,

போர் உலாவு மழுவான், அனல் ஆடி,

பேர் உலாவு பெருமான், நறையூரில்

சேரும் சித்தீச்சுரமே இடம் ஆமே.

   

7.அன்றி நின்ற அவுணர் புரம் எய்த

வென்றி வில்லி விமலன்-விரும்பும் ஊர்,

மன்றில் வாச மணம் ஆர், நறையூரில்

சென்று சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

   

8.அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால்

நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர்,

பரக்கும் கீர்த்தி உடையார், நறையூரில்

திருக்கொள் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

   

9.ஆழியானும் அலரின் உறைவானும்

ஊழி நாடி உணரார் திரிந்து, மேல்

சூழும் நேட, எரி ஆம் ஒருவன் சீர்

நீழல் சித்தீச்சுரமே நினை நெஞ்சே!

   

10.மெய்யின் மாசர், விரி நுண் துகில் இலார்,

கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல்!

உய்ய வேண்டில், இறைவன் நறையூரில்

செய்யும் சித்தீச்சுரமே தவம் ஆமே.

   

11.மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில்

சித்தன் சித்தீச்சுரத்தை உயர் காழி

அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன்

பத்தும் பாட, பறையும், பாவமே.

திருச்சிற்றம்பலம்    


குறிப்பு : (மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர் தலமும், புகுந்த வீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவத்தலமும் கருதப்படுகிறது.)


செவ்வாய், 3 ஜனவரி, 2023

மனக்கவலை களையவும், பசிப்பிணி தீரவும் பாட வேண்டிய பதிகம் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் அருளிய பதிகம் [7- ம் திருமுறை]

 மனக்கவலை களையவும்,  பசிப்பிணி தீரவும் பாட வேண்டிய பதிகம் 

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் அருளிய பதிகம் [7- ம் திருமுறை]


இறைவர் : விருந்திட்டஈசுவரர், விருந்திட்டவரதர், கச்சபேஸ்வரர்.

இறைவியார் : அஞ்சனாட்சியம்மை.


குறிப்பு : சுந்தரர் திருக்கழுக்குன்றம் வழிபட்டுத் திருக்கச்சூரை அடைந்து பெருமானை - ஆலக்கோயில் அமுதனைத் தொழுது, மதிற்புறத்தே பசியுடன் அமர்ந்திருக்க; இறைவன் அந்தணர் வடிவில் வந்து, சுந்தரை அங்கேயே இருக்கச் செய்து; இவ்வூரிலுள்ள அடியார்கள் வீடுதோறும் சென்று, உணவு பெற்று வந்து, சுந்தரருக்கு இட்டு, அவர் பசியை போக்கினாராம். பசி நீங்கப் பெற்ற சுந்தரர், இறையருள் கருணையை வியந்து, 'முதுவாய் ஓரி ' என்னும் இந்த பதிகம் பாடிப் போற்றினார்.


திருச்சிற்றம்பலம் 

1.முதுவாய் ஓரி கதற முதுகாட்டு

         எரிகொண்டு ஆடல் முயல்வானே,

மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்

         மலையான் மகள்தன் மணவாளா,

கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்

         கண்டால், அடியார் கவலாரே,

அதுவே ஆமாறு இதுவோ, கச்சூர்

         ஆலக் கோயில் அம்மானே.


2.கச்சுஏர் அரவுஒன்று அரையில் அசைத்துக்

         கழலும் சிலம்பும் கலிக்கப் பலிக்கென்று

உச்சம் போதா ஊர்ஊர் திரியக்

         கண்டால், அடியார் உருகாரே,

இச்சை அறியோம் எங்கள் பெருமான்,

         ஏழேழ் பிறப்பும் எனைஆள்வாய்,

அச்சம் இல்லாக் கச்சூர் வடபால்

         ஆலக் கோயில் அம்மானே.


3.சாலக் கோயில் உளநின் கோயில்,

         அவைஎன் தலைமேல் கொண்டாடி,

மாலைத் தீர்ந்தேன், வினையும் துரந்தேன்,

         வானோர் அறியா நெறியானே,

கோலக் கோயில் குறையாக் கோயில்

         குளிர்பூங் கச்சூர் வடபாலை

ஆலக் கோயில் கல்லால் நிழற்கீழ்

         அறங்கள் உரைத்த அம்மானே.


4.விடையும் கொடியும் சடையும் உடையாய்,

         மின்னேர் உருவத்து ஒளியானே,

கடையும் புடைசூழ் மணிமண் டபமும்

         கன்னி மாடம் கலந்துஎங்கும்,

புடையும் பொழிலும் புனலும் தழுவி,

         பூமேல் திருமா மகள்புல்கி,

அடையும் கழனிப் பழனக் கச்சூர்

         ஆலக் கோயில் அம்மானே.


5.மேலை விதியே, விதியின் பயனே,

         விரவார் புரமூன்று எரிசெய்தாய்,

காலை எழுந்து தொழுவார் தங்கள்

         கவலை களைவாய், கறைக்கண்டா,

மாலை மதியே, மலைமேல் மருந்தே,

         மறவேன் அடியேன், வயல்சூழ்ந்த

ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்

         ஆலக் கோயில் அம்மானே.


6.பிறவாய், இறவாய், பேணாய், மூவாய்,

         பெற்றம் ஏறிப் பேய்சூழ்தல்

துறவாய், மறவாய், சுடுகாடு என்றும்

         இடமாக் கொண்டு நடம்ஆடி,

ஒறுவாய்த் தலையில் பலிநீ கொள்ளக்

         கண்டால், அடியார் உருகாரே,

அறவே ஒழியாய், கச்சூர் வடபால்

         ஆலக் கோயில் அம்மானே.


7.பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்

         அதுவும் பொருளாக் கொள்வானே,

மெய்யே, எங்கள் பெருமான், உன்னை

         நினைவார் அவரை நினைகண்டாய்,

மைஆர் தடங்கண் மடந்தை பங்கா,

         கங்கார் மதியம் சடைவைத்த

ஐயா, செய்யாய், வெளியாய், கச்சூர்

         ஆலக் கோயில் அம்மானே.


8.ஊனைப் பெருக்கி உன்னை நினையாது

         ஒழிந்தேன், செடியேன், உணர்வில்லேன்,

கானக் கொன்றை கமழ மலரும்

         கடிநாறு உடையாய், கச்சூராய்,

மானைப் புரையும் மடமென் னோக்கி

         மடவாள் அஞ்ச மறைத்திட்ட

ஆனைத் தோலாய், ஞானக் கண்ணாய்,

         ஆலக் கோயில் அம்மானே.


9.காதல் செய்து களித்துப் பிதற்றிக்

         கடிமா மலர்இட்டு உனைஏத்தி,

ஆதல் செய்யும் அடியார் இருக்க,

         ஐயங் கொள்ளல் அழகிதே,

ஓதக் கண்டேன், உன்னை மறவேன்,

         உமையாள் கணவா, எனைஆள்வாய்,

ஆதற் கழனிப் பழனக் கச்சூர்

         ஆலக் கோயில் அம்மானே.


10.அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்

         ஆலக் கோயில் அம்மானை,

உன்னம் உன்னும் மனத்து ஆரூரன்,

         ஆரூ ரன்பேர் முடிவைத்த

மன்னு புலவன், வயல்நா வலர்கோன்,

         செஞ்சொல் நாவன், வன்தொண்டன்

பன்னு தமிழ்நூல் மாலை வல்லார்

         அவர்என் தலைமேல் பயில்வாரே.


திருச்சிற்றம்பலம்


குறிப்பு : இப்பாடலின்  5 வது  பதிகத்தில்  

மேலை விதியே, விதியின் பயனே,

         விரவார் புரமூன்று எரிசெய்தாய்,

காலை எழுந்து தொழுவார் தங்கள்

         கவலை களைவாய், கறைக்கண்டா,

மாலை மதியே, மலைமேல் மருந்தே,

         மறவேன் அடியேன், வயல்சூழ்ந்த

ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்

         ஆலக் கோயில் அம்மானே.


என்று சுந்தரர் குறிப்பிடுகிறார் .


சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமை திருக்கச்சூருக்கு உண்டு.அதனால் விருந்திட்ட ஈஸ்வரர் என்ற பெயரும் மூலவருக்கு உண்டு.

மனக்கவலை இல்லாமல் வாழ பாட வேண்டிய திருப்புகழ்

 மனக்கவலை இல்லாமல் வாழ பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 

பழனி 


"வேலும் மயிலும் சேவலும் துணை"


மனக் கவலை ஏதும் இன்றி, உனக்கு அடிமையே புரிந்து,

     வகைக்கும் மநு நூல் விதங்கள் ...... தவறாதே,


வகைப்படி மனோ ரதங்கள் தொகைப்படியினால் இலங்கி,

     மயக்கம் அற, வேதமும் கொள் ...... பொருள்நாடி,


வினைக்கு உரிய பாதகங்கள் துகைத்து, வகையால் நினைந்து,

     மிகுத்த பொருள் ஆகமங்கள் ...... முறையாலே,


வெகுட்சி தனையே துரந்து, களிப்பின் உடனே நடந்து,

     மிகுக்கும் உனையே வணங்க ...... வரவேணும்.


மனத்தில் வருவோனெ என்று, உன் அடைக்கலம் அதாக வந்து,

     மலர்ப்பதம் அதே பணிந்த ...... முநிவோர்கள்,


வரர்க்கும், இமையோர்கள் என்பர் தமக்கும், மனமே இரங்கி,

     மருட்டி வரு சூரை வென்ற ...... முனைவேலா!


தினைப்புனம் முனே நடந்து, குறக்கொடியையே மணந்து,

     செகத்தை முழுது ஆள வந்த ...... பெரியோனே!


செழித்த வளமே சிறந்த மலர்ப் பொழில்களே நிறைந்த,

     திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.


"வேலும் மயிலும் சேவலும் துணை"


திங்கள், 2 ஜனவரி, 2023

நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் தீர பாட வேண்டிய பதிகம்...

 நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் தீர பாட வேண்டிய பதிகம்...


பாவநாசத் திருப்பதிகம் அப்பர் பெருமான் அருளியது 


திருச்சிற்றம்பலம் 


1.பற்று அற்றார் சேர் பழம் பதியை, பாசூர் நிலாய பவளத்தை,

சிற்றம்பலத்து எம் திகழ்கனியை, தீண்டற்கு அரிய திரு உருவை,

வெற்றியூரில் விரிசுடரை, விமலர்கோனை, திரை சூழ்ந்த

ஒற்றியூர் எம் உத்தமனை, உள்ளத்துள்ளே வைத்தேனே.

 

2.ஆனைக்காவில் அணங்கினை, ஆரூர் நிலாய அம்மானை,

கானப் பேரூர்க் கட்டியை, கானூர் முளைத்த கரும்பினை,

வானப் பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை,

மானக் கயிலை மழகளிற்றை, மதியை, சுடரை, மறவேனே.

 

3.மதி அம் கண்ணி நாயிற்றை, மயக்கம் தீர்க்கும் மருந்தினை,

அதிகைமூதூர் அரசினை, ஐயாறு அமர்ந்த ஐயனை,

விதியை, புகழை, வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை,

நெதியை, ஞானக் கொழுந்தினை, நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே.

 

4.புறம் பயத்து எம் முத்தினை, புகலூர் இலங்கு பொன்னினை,

உறந்தை ஓங்கு சிராப் பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை,

கறங்கும் அருவிக் கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை,

அறம் சூழ் அதிகை வீரட்டத்து அரிமான் ஏற்றை, அடைந்தேனே.

 

5.கோலக் காவில் குருமணியை, குடமூக்கு உறையும் விடம் உணியை,

ஆலங்காட்டில் அம் தேனை, அமரர் சென்னி ஆய்மலரை,

பாலில்-திகழும் பைங்கனியை, பராய்த்துறை எம் பசும் பொன்னை,

சூலத்தானை, துணை இலியை, தோளைக் குளிரத் தொழுதேனே.

 

6.மருகல் உறை மாணிக்கத்தை, வலஞ்சுழி(ய்)யின் மாலையை,

கருகாவூரில் கற்பகத்தை, காண்டற்கு அரிய கதிர் ஒளியை,

பெருவேளூர் எம் பிறப்பு இலியை, பேணுவார்கள் பிரிவு அரிய

திரு வாஞ்சியத்து எம் செல்வனை, சிந்தையுள்ளே வைத்தேனே.

 

7.எழில் ஆர் இராச சிங்கத்தை, இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை,

குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை,

நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை,

அழல் ஆர் வண்ணத்து அம்மானை, அன்பில் அணைத்து வைத்தேனே.

 

8.மாலைத் தோன்றும் வளர்மதியை, மறைக்காட்டு உறையும் மணாளனை,

ஆலைக் கரும்பின் இன்சாற்றை, அண்ணாமலை எம் அண்ணலை,

சோலைத் துருத்தி நகர் மேய சுடரில்-திகழும் துளக்கு இலியை,

மேலை வானோர் பெருமானை, விருப்பால் விழுங்கியிட்டேனே.

 

9.சோற்றுத்துறை எம் சோதியை, துருத்தி மேய தூமணியை,

ஆற்றில் பழனத்து அம்மானை, ஆலவாய் எம் அருமணியை,

நீரில் பொலிந்த நிமிர் திண்தோள் நெய்த்தானத்து எம் நிலாச்சுடரைத்

தோற்றக் கடலை, அடல் ஏற்றை, தோளைக் குளிரத் தொழுதேனே.

10.புத்தூர் உறையும் புனிதனை, பூவணத்து எம் போர் ஏற்றை,

வித்து ஆய் மிழலை முளைத்தானை, வேள்விக் குடி எம் வேதியனை,

பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை, பொதியில் மேய புராணனை,

வைத்தேன், என் தன் மனத்துள்ளே-மாத்தூர் மேய மருந்தையே.

11.முந்தித் தானே முளைத்தானை, மூரி வெள் ஏறு ஊர்ந்தானை,

அந்திச் செவ்வான் படியானை, அரக்கன் ஆற்றல் அழித்தானை,

சிந்தை வெள்ளப் புனல் ஆட்டிச் செஞ்சொல் மாலை அடிச் சேர்த்தி,

“எந்தை பெம்மான், என் எம்மான்” என்பார் பாவம் நாசமே.


திருச்சிற்றம்பலம் 

   

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

முருகப்பெருமான் நாம் செல்லும் இடமெல்லாம் நாம் அழைக்கும் போது நம் முன் வந்து நமக்கு அருள் கொடுக்கும் ஒரு அருமை வாய்ந்த திருப்புகழ்!!!!!

முருகப்பெருமான் நாம் செல்லும் இடமெல்லாம் நாம் அழைக்கும் போது நம் முன் வந்து நமக்கு அருள் கொடுக்கும் ஒரு அருமை வாய்ந்த திருப்புகழ்!!!!!

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 

திருச்செங்கோடு 


"வேலும் மயிலும் சேவலும் துணை "`


அன்பாக வந்து உன்றாள் பணிந்து

     ஐம்பூத மொன்ற ...... நினையாமல்


அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க

     ளம்போரு கங்கள் ...... முலைதானும்


கொந்தே மிகுந்து வண்டாடி நின்று

     கொண்டாடு கின்ற ...... குழலாரைக்


கொண்டே நினைந்து மன்பேது மண்டி

     குன்றா மலைந்து ...... அலைவேனோ


மன்றாடி தந்த மைந்தா மிகுந்த

     வம்பார் கடம்பை ...... யணிவோனே


வந்தே பணிந்து நின்றார் பவங்கள்

     வம்பே தொலைந்த ...... வடிவேலா


சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ

     செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும்


செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த

     செங்கோ டமர்ந்த ...... பெருமாளே.


"வேலும் மயிலும் சேவலும் துணை "

குறிப்பு : 

(சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ ... பல இடங்களுக்கும்

சென்று கந்தா என அழைக்கும்போது

செஞ்சேவல் கொண்டு வரவேணும் ... செவ்விய சேவலை ஏந்தி

என்முன் வரவேண்டும்.)

என்ற வரிகளில் காணலாம் ...


இந்த வருடம் அல்லாமல் இனி வருகின்ற அனைத்து வருடமும் நாம் சீரும் சிறப்பும் வாழ பாட வேண்டிய இந்த வருடத்தின் முதல் பதிகம் !!!!!!!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023!!!!!!!!!!!!!!!

அன்பிற்கினியீர் சைவ சிவ அன்பர்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.....

இந்த வருடம் அல்லாமல் இனி வருகின்ற அனைத்து வருடமும் நாம் சீரும் சிறப்பும் வாழ பாட வேண்டிய இந்த வருடத்தின் முதல் பதிகம் !!!!!!!

குறிப்பு : (இங்குள்ள இறைவனை செல்வத்தின் அதிபதியாகிய “திரு” என்ற மகாலட்சுமி பூஜித்து வழிபட்டுள்ளார். இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் செல்வத்திற்கும், தம்பதி ஒற்றுமைக்கும் குறைவிருக்காது என்பது நம்பிக்கை.)

இறைவர் திருப்பெயர்: மகாலட்சுமீசர், லக்ஷிமிபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: லோகநாயகி.

திருநின்றியூர்

திருச்சிற்றம்பலம் 


1.சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடு நீறு;
பால் அம்மதி பவளச் சடை முடி மேலது பண்டைக்
காலன் வலி காலினொடு போக்கி, கடி கமழும்
நீல மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே.
   
2.அச்சம் இலர்; பாவம் இலர்; கேடும் இலர்; அடியார்,
நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில்
நச்சம் மிடறு உடையார், நறுங்கொன்றை நயந்து ஆளும்
பச்சம் உடை அடிகள், திருப்பாதம் பணிவாரே. உரை
   
3.பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவும், ஆர
அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை;
நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள், நின்றியூரில்
உறையும் இறை, அல்லது எனது உள்ளம் உணராதே!
   
4.பூண்ட வரைமார்பில் புரிநூலன், விரி கொன்றை
ஈண்ட அதனோடு ஒரு பால் அம்மதி அதனைத்
தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில்
ஆண்ட கழல் தொழல் அல்லது, அறியார் அவர் அறிவே!
   
5.குழலின் இசை வண்டின் இசை கண்டு, குயில் கூவும்
நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில்,
அழலின் வலன் அங்கையது ஏந்தி, அனல் ஆடும்
கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகணே.
   
6.மூரல் முறுவல் வெண் நகை உடையாள் ஒரு பாகம்,
சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த
வீரன், மலி அழகு ஆர் பொழில் மிடையும் திரு நின்றி
யூரன், கழல் அல்லாது, எனது உள்ளம் உணராதே!
   
7.பற்றி ஒரு தலை கையினில் ஏந்திப் பலி தேரும்
பெற்றி அது ஆகித் திரி தேவர் பெருமானார்,
சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும்
நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே.
   
8.நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான்,
“அல்லர்” என, “ஆவர்” என, நின்றும் அறிவு அரிய
நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம்
செல்வர் அடி அல்லாது, என சிந்தை உணராதே!
   
9.நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை
அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே,
நெறி இல்லவர் குறிகள் நினையாதே, நின்றியூரில்
மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே!
   
10.குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆக
நின்று அங்கு ஒருவிரலால் உற வைத்தான் நின்றியூரை
நன்று ஆர்தரு புகலித் தமிழ் ஞானம் மிகு பந்தன்
குன்றாத் தமிழ் சொல்லக் குறைவு இன்றி நிறை புகழே.

திருச்சிற்றம்பலம்

மேலும் சில குறிப்புகள் :

 (வழிபட்டோர் : இலக்குமி, பரசுராமர், அகத்தியர் இந்திரன், ஐராவதம், பசு, சோழ மன்னன்.
பாடியோர் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்.


இப்பதிக கடைசி வரியில் நம் சம்பந்தர் இப்பாடலை படிப்பதால் குறைவின்றி புகழ் கிடைக்கும் என்று கூறி இருக்கின்றார்.


"தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த திருவருள் நலம் குன்றாத இத்திருப்பதிகப் பாடல்களை உரைப்பதனால் குறைவின்றிப் புகழ் நிறையும்".


எனவே மஹாலக்ஷ்மி அம்பாள் வழிபட்ட இத்தலத்து பதிகத்தை நாமும் அனுதினமும்  படித்து செல்வ வளமும் குறைவில்லா நிறை புகழும்  பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்!!!!!


சிவாயநம!!!~







திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...