சனி, 11 அக்டோபர், 2014

கோளறு திருப்பதிகம்

கோளறு திருப்பதிகம்  

நவக்கிரகங்களால்  ஏற்படும் இடர்களை ஒழித்து நன்மை செய்ய உதவும் அற்புதப்  பதிகம்..


நவக்கிரகங்கள் அனைத்தும் சிவபெருமானின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றனர்...ஆகையால் நம் ஈசனை வழிபடுவோருக்கு நவக்கி ரகங்களால் எந்த வித பாதிப்பும் வராது,மேலும் இப்பதிகத்தினை பக்தியுடன் படிப்பதால் நவக்கிரகத்தினால் எந்த வித பாதிப்பும் வாராது என்பது உறுதி..
வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போதும் சரி,எந்த நேரமாவது சகுனம் சரி அல்ல என்று நாம் நினைக்கும் போதும் சரி, இத் திருப்பதிகத்தினை படித்தால் நமக்கு நவக்கிரகங்களால் எந்த பாதிப்பும் வராது..

திருச்சிற்றம்பலம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.           1.

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
*ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.          2.

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வ மானபலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.        3.

மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.      4.

நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு
மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.   5.

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.    6.

செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.   7.

வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.    8.

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.    9.

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.   10.

தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.  11.

திருச்சிற்றம்பலம் 



(நமச்சிவாய திருப்பதிகங்கள்)-மன வேதனைகள் நீங்கி, ஆயுள் முழுவதும் எந்த வித குறையுமில்லாமல் வாழ ஓத வேண்டிய திருப்பதிகம்

உ 
நமசிவாய திருப்பதிகங்கள் 

திருப்பஞ்சாக்கரப்பதிகம் 


 மன வேதனைகள் நீங்கி, ஆயுள் முழுவதும் எந்த வித குறையுமில்லாமல் வாழ ஓத வேண்டிய திருப்பதிகம்


 திருச்சிற்றம்பலம்



துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,
நெஞ்சு அகம் நைந்து, நினைமின், நாள்தொறும்,
வஞ்சகம் அற்று! அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உடைத்தன, அஞ்சு எழுத்துமே.     1


மந்திர நால்மறை ஆகி, வானவர்
சிந்தையுள் நின்று, அவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம், அஞ்சு எழுத்துமே.     2


ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண் சுடர்
ஞானவிளக்கினை ஏற்றி, நன் புலத்து
ஏனை வழி திறந்து, ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே.     3


நல்லவர் தீயவர் எனாது, நச்சினர்
செல்லல் கெட, சிவமுத்தி காட்டுவ;
கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து
அல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே.     4


கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து; அகத்து
அங்கு உள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்;
தங்கு அரவின் படம் அஞ்சு; தம் உடை
அம் கையில் ஐவிரல்; அஞ்சு, எழுத்துமே.     5


தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்,
அம்மையினும், துணை அஞ்சு எழுத்துமே.     6


வீடு பிறப்பை அறுத்து, மெச்சினர்
பீடை கெடுப்பன; பின்னை, நாள்தொறும்
மாடு கொடுப்பன; மன்னு மா நடம்
ஆடி உகப்பன அஞ்சு எழுத்துமே.     7


வண்டு அமர் ஓதி மடந்தை பேணின;
பண்டை இராவணன் பாடி உய்ந்தன;
தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே.     8



கார்வணன், நான்முகன், காணுதற்கு ஒணாச்
சீர் வணச் சேவடி செவ்வி, நாள்தொறும்,
பேர் வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர் வணம் ஆவன அஞ்சு எழுத்துமே.     9
புத்தர், சமண் கழுக் கையர், பொய் கொளாச்
சித்தத்தவர்கள் தெளிந்து தேறின;
வித்தக நீறு அணிவார் வினைப்பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே.     10
நல்-தமிழ் ஞானசம்பந்தன்-நால்மறை
கற்றவன், காழியர் மன்னன்-உன்னிய
அற்றம் இல் மாலைஈர் ஐந்தும், அஞ்சு எழுத்து
உற்றன, வல்லவர் உம்பர் ஆவரே.     
11

திருச்சிற்றம்பலம்
 




மனநோய், டென்சன் போன்றவைகளிலிருந்து விடுபட ஓத வேண்டிய திருபதிகம்

உ 
மன நோய் தீர்க்கும் அரிய திருப்பதிகம்.  இன்றைய சூழலில் நாம் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் சிலர் மன ரீதியாக கவலை யுடன் வாழ்கின்ற சூழலில் இருக்க வேண்டியதாக இருக்கிறது ...அந்த மன கஷ்டத்தை, போக்கி நமக்கு வினைகளை அறவே நீக்கும் அற்புத பதிகம்..

இப்பதிகத்தின் 4 வது பாடலில் "சிந்தை நோயவை தீர நல்கிடும்" என்று ஞான சம்பந்த பெருமான் பாடியதன் மூலம் இப்பதிகத்தின் பொருளை நன்கு உணரலாம்..

திருப்பூந்தராய்

 திருச்சிற்றம்பலம்


தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
மிக்க செம்மை விமலன் வியன்கழல்
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
நன்ற தாகிய நம்பன்தானே.
01


புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளந் தாங்கு விகிர்தன் அடிதொழ
ஞாலத் தில்லுயர் வாருள்கு நன்னெறி
மூல மாய முதல்வன்தானே.
02


வேந்த ராயுல காள விருப்புறிற்
பூந்தராய் நகர் மேயவன் பொற்கழல்
நீதி யால்நினைந் தேத்தி யுள்கிடச்
சாதி யாவினை யானதானே.
03


பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய்
ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிடச்
சிந்தை நோயவை தீர நல்கிடும்
இந்து வார்சடை யெம்மிறையே.
04


பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்திய ராகி வணங்கிட
நுந்தம் மேல்வினை யோட வீடுசெய்
எந்தை யாயஎம் ஈசன்தானே.
05


பூதஞ் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கு நாடொறும் இன்ப நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே.
06


புற்றில் நாகம் அணிந்தவன் பூந்தராய்
பற்றி வாழும் பரமனைப் பாடிடப்
பாவ மாயின தீரப் பணித்திடுஞ்
சேவ தேறிய செல்வன்தானே.
07


போத கத்துரி போர்த்தவன் பூந்தராய்
காத லித்தான் கழல்விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள்
பெருக்கி நின்ற எம்பிஞ்ஞகனே.
08


மத்த மான இருவர் மருவொணா
அத்த னானவன் மேவிய பூந்தராய்
ஆள தாக அடைந்துய்ம்மின் நும்வினை
மாளு மாறருள் செய்யுந்தானே.
09


பொருத்த மில்சமண் சாக்கியர் பொய்கடிந்
திருத்தல் செய்த பிரான்இமை யோர்தொழப்
பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை
ஏந்து மான்மறி யெம்மிறையே.
10


புந்தி யால்மிக நல்லவர் பூந்தராய்
அந்த மில்லெம் மடிகளை ஞானசம்
பந்தன் மாலைகொண் டேத்தி வாழுநும்
பந்த மார்வினை பாறிடுமே.
11

திருச்சிற்றம்பலம்

 

வெப்பு நோய், தோல் நோய் போன்ற நோய்கள் நீங்க ஓத வேண்டிய பதிகம்

 

திரு ஞான சம்பந்தர் பாண்டிய மன்னனின் வெப்பு நோயை குணப்படுத்துவதற்காக பாடிய அற்புத திருப்பதிகம்..
காய்ச்சல்,தோல் வியாதிகளால் பாதிக்க பட்டிருப்பின் இப்பதிகத்தை மனமுருகபாடி  திருவைந்தெழுத்தோதி விபூதி இட்டுக் கொண்டால் அவை பூரண குணமடையும் என்பது உண்மை.

திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம்

 திருச்சிற்றம்பலம் 


மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.
01


வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.
02


முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.
03


காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.
04


பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.
05


அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.
06


எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே.
07


இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.
08


மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே.
09


குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே.
10


ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
11

திருச்சிற்றம்பலம் 

நம்மை சிவரத்தினமாய் திகழ வைக்கும் ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை

உ 
 ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை 
ஸ்ரீ அகஸ்தியர் அருளியது 


ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான சத்குரு சரணம் சரணம்
ஞானானந்தா சரணம் சரணம்

ஆக்கும் தொழில் ஐந்தரனாற்ற நலம்

பூக்கும் நகையாள் புவநேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினை
காக்கும் கன நாயக வாரணமே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

வைரம்
-----------

கற்றும் தெளியார் காடே கதியாய்

கண்மூடி நெடுன்கன வான தவம்
பெற்றும்தெரியார் நிலை என்னில் அவம்
பெருகும் பிழையேன் பேச தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிர
பகைவர்க் கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட் சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (மாதா...)

நீலம்

--------
மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீல திருமேனியிலே நினைவாய்
நினைவற்றேளியேன் நின்றேன் வருவாய்
வாலைகுமரி வருவாய் வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே (மாதா...)
முத்து
---------
முத்தேவரும் முத்தொழிலாற்றிடவே
முன்னின்றருளும் முதல்வீ சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேரிய நான் தனையன் தாய் நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேருததித் கினை வாழ்வடையேன்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே (மாதா...)

பவழம்

----------
அந்தி மயங்கிய வானவிதானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் போழிவாரோ
தேம்போழிலாம் இதை செயதவளாரோ
எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள்
என்னுபவர்க்கருள் என்னமிகுத்தாள்
மந்திர வேத மயப்பொருள் ஆனாள்
மாதா ஜெயா ஓம் லலிதாம்பிகையே (மாதா...)
மாணிக்கம்
----------------
காணக் கிடையா கதியானவளே
கருதக்கிடையா கலையானவளே
பூனக் கிடையா பொலிவானவளே
புனைய கிடையா புதுமைத்தவளே
நாணித் திரு நாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே (மாதா...)

மரகதம்

-----------
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுருதி ஜதி லயமே இசையே சரணம்
அர ஹர சிவனென்று அடியவர் குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வரணவ நிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (மாதா...)
 
கோமேதகம்
-----------------
பூமேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன்குன்றா வரமும்
தீமேலிடினும் ஜெய சக்தியென
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கொமதகமே குளிர் வான் நிலவே
குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (மாதா...)

பதுமராகம்

---------------
ரஞ்சனி நந்தினி அங்கனி பதும
ராக விலாச வ்யாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்திரா கலா தரிராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு ச்ருங்க நிவாசினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகை (மாதா...)

வைடூரியம்

----------------
வலையோத்த வினை கலையொத்த மனம்
மருளப் பரையாரொலியொத்த விதால்
நிலைஎற்றேளியேன் முடியத்தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலைவற்றசைவட் ரனுபூதி பெரும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (மாதா...)

பயன்

--------
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தியெல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வார் அவரே... (மாதா...)

 

வியாழன், 9 அக்டோபர், 2014

வழக்குகளில் வெற்றி பெறவும், செய்யும் தொழிலில் லாபம் பெறவும் ,மூத்த சகோதரர்கள் ஒற்றுமையாய் இருப்பதற்கும் ஓத வேண்டிய பதிகம்

  
வழக்குகளில் வெற்றி பெறவும், செய்யும் தொழிலில் லாபம் பெறவும் ,மூத்த சகோதரர்கள் ஒற்றுமையாய்  இருப்பதற்கும் ஓத  வேண்டிய பதிகம்

திருச்சிற்றம்பலம் 

 திருவீழிமிழலை




1.வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே.



2.இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.



3.செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.



4.நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே.



5.காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர், சேமம் நல்குமே.



6.பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.



7.மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.



8.அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.



9.அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.



10.பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே.



11.காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.

திருச்சிற்றம்பலம் 







கல்வி, செல்வம், வெற்றி,புகழ் பெற ஓத வேண்டிய பதிகம்

தேவாரத்தில் நம் சம்பந்தரால் இயற்றப்பட்ட இதிருப்பதிகத்தினை ஓதுவோர் கல்வி, செல்வம்,வெற்றி,புகழ்   ஆகியவைகளை  பெறலாம்..
இப்பதிகத்தில் கடைசி பாடலில் 




"மனமகிழ் வொடுபயில் பவரெழின்
மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மக ளிசைதர
இருநில னிடையினி தமர்வரே" 





என்று சம்பந்த பெருமான் கூறி இருப்பதன் மூலம் இப்பாடலின் பலன் நமக்கு விளங்கும்..அனு  தினமும் ஓதி உய்வு பெறுவோம்.....








திருவீழிமிழலை 
 திருச்சிற்றம்பலம் 


1.தட நிலவிய மலை நிறுவி, ஒரு தழல் உமிழ்தரு பட அரவுகொடு,
அடல் அசுரரொடு அமரர்கள், அலைகடல் கடைவுழி எழும்
                                                             
மிகு சின
விடம் அடைதரும் மிடறு உடையவன்; விடைமிசை வருமவன்;
                                                             
உறை பதி
திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை
                                                             
திரு மிழலையே.

2.தரையொடு திவிதலம் நலிதரு தகு திறல் உறு சலதரனது
வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன்;
உரை மலிதரு சுரநதி, மதி, பொதி சடையவன்; உறை பதி மிகு
திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர்
                                                             
திரு மிழலையே.

3.மலைமகள் தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர்
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன்
                                                             
உறை பதி
கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு,
சிலை மலி மதில் புடை தழுவிய, திகழ் பொழில் வளர்,
                                                             
திரு மிழலையே.

4.மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய
பெரு வலியினன், நலம் மலிதரு கரன், உரம் மிகு பிணம் அமர் வன
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன், இனிது
                                                             
உறை பதி
தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே.

5.அணி பெறு வட மர நிழலினில், அமர்வொடும் அடி இணை
                                                             
இருவர்கள்
பணிதர, அறநெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல்
                                                             
அணி,
திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல்,
                                                             
திரு மிழலையே.

6.வசை அறு வலி வனசர உரு அது கொடு, நினைவு அருதவம் முயல்
விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல்கொடு
                                                             
செய்து,
அசைவு இல படை அருள் புரிதருமவன் உறை பதி அது மிகு தரு
திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு
                                                             
திரு மிழலையே.

7.நலம் மலிதரு மறைமொழியொடு, நதி உறுபுனல், புகை, ஒளி முதல்,
மலர் அவைகொடு, வழிபடு திறல் மறையவன் உயிர் அது
                                                             
கொள வரு
சலம் மலிதரு மறலிதன் உயிர்கெட, உதைசெய்த அரன் உறை பதி
"
திலகம் இது!" என உலகுகள் புகழ்தரு, பொழில் அணி,
                                                             
திரு மிழலையே.

8.அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது
கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன்;
வரல் முறை உலகு அவை தரு, மலர் வளர், மறையவன்
                                                             
வழி வழுவிய
சிரம் அதுகொடு பலி திரிதரு சிவன்; உறை பதி திரு மிழலையே.

9.அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன், அளவிடல்
                                                             
ஒழிய, ஒரு
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர,
                                                             
வரல்முறை,
"
சய சய!" என மிகு துதிசெய, வெளி உருவிய அவன் உறை பதி
செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே.

10.இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி
                                                             
சமண்விரகினர்,
திகழ் துவர் உடை உடல் பொதிபவர், கெட, அடியவர் மிக அருளிய
புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய
                                                             
புவி
திகழ் சுரர்தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ்
                                                             
திரு மிழலையே.

11.சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை, மிகு
தன மனர், சிரபுரநகர் இறை தமிழ்விரகனது உரை ஒருபதும்
மன மகிழ்வொடு பயில்பவர், எழில் மலர் மகள், கலை மகள்,
                                                             
சய மகள்,
இனம் மலி புகழ்மகள், இசை தர, இரு நிலன் இடை இனிது அமர்வரே.


  திருச்சிற்றம்பலம் 












  

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...