வியாழன், 22 டிசம்பர், 2022

பகை தீர பாட வேண்டிய திருப்புகழ் (அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் )

 பகை தீர பாட  வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 

சோமநாதன்மடம்


"வேலும் மயிலும் சேவலும் துணை"


ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு

     முழலுமநு ராக மோக ...... அநுபோகம்


உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத

     வுளமுநெகிழ் வாகு மாறு ...... அடியேனுக்


கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர

     மெனமொழியும் வீசு பாச ...... கனகோப


எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை

     யெனதுபகை தீர நீயும் ...... அருள்வாயே


அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை

     அடைவுதவ றாது பேணும் ...... அறிவாளன்


அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன்

     அவனிபுகழ் சோமநாதன் ...... மடமேவும்


முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ

     முகரசல ராசி வேக ...... முனிவோனே


மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு

     முனியஅறி யாத தேவர் ...... பெருமாளே.


"வேலும் மயிலும் சேவலும் துணை"


குறிப்பு : இப்பாடலில் நடு வரிகளில்  (எம படரை = எம தூதர்களை மோதும் = மோதி வெருட்டத் தக்க மோன உரையில் = மௌன நிலையை உபதேச வாளை = உபதேசம் என்கின்ற வாளை எனது பகை தீர = எனது உட்பகை, புறப்பகை யாவும் ஒழிந்து போக நீயும் அருள்வாயே = தயை கூர்ந்து அருள் புரிய வேண்டும்) இவ்வாறு இருப்பதை நாம் அறியலாம் .


புதன், 21 டிசம்பர், 2022

2)கல்வியில் சிறந்து விளங்கி அதிக மதிப்பெண் பெற ஓத வேண்டிய இரண்டாவது பதிகம்! ( அப்பர் பெருமான் பதிகம்)

2)கல்வியில் சிறந்து விளங்கி அதிக மதிப்பெண் பெற ஓத வேண்டிய இரண்டாவது  பதிகம்!

( அப்பர் பெருமான் பதிகம்)


திருஇன்னம்பர் ( 5 ஆம்  திருமுறை )

திருக்குறுந்தொகை


                    திருச்சிற்றம்பலம் 

1.என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை;

என்னிலும்(ம்) இனியான் ஒருவன்(ன்)உளன்;

என் உளே உயிர்ப்பு ஆய்ப் புறம் போந்து புக்கு

என் உளே நிற்கும், இன்னம்பர் ஈசனே.


2.மட்டு உண்பார்கள், மடந்தையர் வாள் கணால்

கட்டுண்பார்கள், கருதுவது என்கொலோ?

தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குழி

எட்டுமூர்த்தியர், இன்னம்பர் ஈசனே,


3கனலும் கண்ணியும், தண்மதியோடு, உடன்

புனலும், கொன்றையும், சூடும் புரிசடை;

அனலும், சூலமும், மான்மறி, கையினர்

எனலும், என் மனத்து, இன்னம்பர் ஈசனே.


4.மழைக்கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான்

அழைக்கும், தன் அடியார்கள் தம் அன்பினை;

குழைக்கும் தன்னைக் குறிக்கொள வேண்டியே

இழைக்கும், என் மனத்து-இன்னம்பர் ஈசனே.


5.தென்னவன்(ன்); எனை ஆளும் சிவன் அவன்;

மன்னவன்; மதி அம் மறை ஓதியான்;

முன்னம் அன்னவன் சேரலன், பூழியான்,

இன்னம் இன்பு உற்ற இன்னம்பர் ஈசனே.


6.விளக்கும், வேறுபடப் பிறர் உள்ளத்தில்;

அளக்கும், தன் அடியார் மனத்து அன்பினை;

குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே

இளக்கும், என் மனத்து-இன்னம்பர் ஈசனே.


7.சடைக்கணாள், புனலாள்; அனல் கையது; ஓர்

கடைக்கணால் மங்கை நோக்க, இமவான்மகள்

படைக்கணால் பருகப்படுவான் நமக்கு

இடைக்கண் ஆய் நின்ற இன்னம்பர் ஈசனே.


8.தொழுது தூ மலர் தூவித் துதித்து நின்று

அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்,

பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்,

எழுதும், கீழ்க்கணக்கு-இன்னம்பர் ஈசனே.


9.விரியும் தண் இளவேனில் வெண்பிறை

புரியும் காமனை வேவ, புருவமும்

திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து

எரிய, நோக்கிய இன்னம்பர் ஈசனே.!


10.சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்

முனிவனாய் முடிபத்து உடையான் தனைக்

கனிய ஊன்றிய காரணம் என்கொலோ,

இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே?

                திருச்சிற்றம்பலம் 


1)கல்வியில் சிறந்து விளங்கி அதிக மதிப்பெண் பெற ஓத வேண்டிய முதல் பதிகம்!(திருஞானசம்பந்தர் பதிகம்)

1) கல்வியில் சிறந்து விளங்கி அதிக மதிப்பெண் பெற ஓத வேண்டிய முதல் பதிகம் !!!!!


இங்கு நான் கல்வியில் சிறந்து விளங்க பாட வேண்டிய சம்பந்தர் மற்றும் அப்பர் பதிகம்கள்  பதிவிட்டுள்ளேன் .கீழே நாம் காண இருப்பது சம்பந்த பெருமானின் இன்னம்பர் பதிகம் ஆகும். அன்பர்கள் படித்து பயன் பெறுக.மேலும் அடுத்த பதிவில் அப்பர் பெருமான் அருளிய இன்னம்பர் பதிகம் கொடுத்து உள்ளேன் .அதையும் படித்து எம்பெருமான் எழுத்தறிநாதர் திருவருளுக்கு பாத்திரமாவோமாக !!!!!!!!!!!!!!!!! 


இறைவர் : எழுத்தறிநாதர், தான்தோன்றியீசர்

இறைவியார் :  கொந்தார் பூங்குழலி, நித்தியகல்யாணி (தனித்தனியே இரு சந்நிதிகள்)


குறிப்பு :(ஐராவதம் வழிபட்ட தலம்.  அகத்தியர் வழிபட்டு இலக்கண உபதேசம் பெற்ற தலம்.  ஈசன் தாமே கணக்கெழுதிக் கொடுத்த தலமாகும்.  கல்வி பயிலத் தொடங்கும் முன், இங்கு உள்ள இறைவனை வழிபட்டால் கல்வி தடையின்றி பயிலும் அருள் கிடைக்கும்.  இத்திருக்கோயிலில் உள்ள சிவலிங்கம் பெரியதாகும்.

 பேச்சுத்திறமை இல்லாதவர்கள் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவுக் கூர்மை பெறுவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே இன்றும் இருக்கிறது (அடியேன் அதற்கு சான்று )

திருஇன்னம்பர் - திருமுக்கால் - சாதாரி

 திருஞானசம்பந்தர் பதிகம் 

            திருச்சிற்றம்பலம் 

1.எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய

வண்டு இசைக்கும் சடையீரே;

வண்டு இசைக்கும் சடையீர்! உமை வாழ்த்துவார்

தொண்டு இசைக்கும் தொழிலாரே.      

   

2.யாழ் நரம்பின்(ன்) இசை இன்னம்பர் மேவிய

தாழ்தரு சடைமுடியீரே;

தாழ்தரு சடைமுடியீர்! உமைச் சார்பவர்

ஆழ்துயர் அருவினை இலரே. 

 

3.இளமதி நுதலியொடு இன்னம்பர் மேவிய

வள மதி வளர் சடையீரே;

வள மதி வளர் சடையீர்! உமை வாழ்த்துவார்

உளம் மதி மிக உடையாரே.      

4.இடி குரல் இசை முரல் இன்னம்பர் மேவிய

கடி கமழ் சடைமுடியீரே;

கடி கமழ் சடைமுடியீர்! உம கழல் தொழும்

அடியவர் அருவினை இலரே.      

 

5.இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய

உமை ஒரு கூறு உடையீரே;

உமை ஒரு கூறு உடையீர்! உமை உள்குவார்

அமைகிலர் ஆகிலர், அன்பே.      

 

6.எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய

தண் அருஞ் சடைமுடியீரே;

தண் அருஞ் சடைமுடியீர்! உமைச் சார்பவர்

விண்ணவர் அடைவு உடையோரே.      


7.எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய

நிழல் திகழ் மேனியினீரே;

நிழல் திகழ் மேனியினீர்! உமை நினைபவர்

குழறிய கொடுவினை இலரே.      

 

8.ஏத்த(அ)ரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய

தூர்த்தனைத் தொலைவு செய்தீரே;

தூர்த்தனைத் தொலைவு செய்தீர்! உமைத் தொழுபவர்

கூர்த்த நல் குணம் உடையோரே.      

 

9.இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய

அயனும் மால் அறிவு அரியீரே;

அயனும் மால் அறிவு அரியீர்! உமது அடி தொழும்

இயல் உளார் மறுபிறப்பு இலரே.      

 

10.ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய

தேர் அமண் சிதைவு செய்தீரே;

தேர் அமண் சிதைவு செய்தீர்! உமைச் சேர்பவர்

ஆர் துயர், அருவினை, இலரே.      

11.ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை,

நாடு அமர் ஞானசம்பந்தன்

நாடு அமர் ஞானசம்பந்தன நல்-தமிழ்,

பாட வல்லார் பழி இலரே.      

                 திருச்சிற்றம்பலம் 


   தல வரலாறு சோழமன்னரிடம் கணக்கராக பணியாற்றிவர் சுதன்மன் என்ற சிவபக்தர். அவரை பிடிக்காதவர்கள் அவரைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் மன்னரிடம் கூறி கோள் மூட்டினர். இதனால் மன்னருக்கு சுதன்மர் எழுதிய கணக்கில் சந்தேகம் ஏற்பட்டது. உடனே சுதன்மரை அழைத்து உரிய கணக்கை சரியாகக் காட்டும்படி கடுமையாக உத்தரவிட்டான்.

     சிவபக்தரான சுதன்மர், உரிய கணக்கு காட்டியும் மன்னன் நம்பவில்லையே! வீண்பழி ஏற்படுகிறதே! என்று சிவனிடம் வருந்தி முறையிட்டார். உடனே, சிவன் சுதன்மரின் வடிவத்தில் மன்னரிடம் சென்று கணக்கை காட்டி மன்னனின் சந்தேகத்தினை நீக்கிவிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் சுதன்மர் கணக்குடன் மன்னரை சந்திக்க சென்றார். அப்போது மன்னன், சுதன்மரே! இப்போதுதான் கணக்குக் காட்டிச்சென்றீர்! மீண்டும் ஏற்கனவே காட்டிய கணக்கை ஏன் காட்ட வருகிறீர் என மன்னன் கேட்டான்.

அப்போது தான் இப்போதுதான் வருவதாகவும், இதுவரை இறைவன் சன்னதியில் இருந்ததையும் சுதன்மர் சொல்ல, வந்தது இறைவனே என்று மன்னன் உணர்கிறார். சுதன்மரின் இறைபக்தியை உணர்ந்த மன்னன் அவரிடம் மன்னிப்பு கேட்டதோடு சிவனுக்கு பெரிய கோவிலையும் எழுப்பினான்.

   சுதன்மர் வழிபட்ட ஈசன் சுயம்பு லிங்கம். எனவே தான் தோன்றீசர் என்று வழங்கப்பட்டது. இறைவன் சுதன்மர் வடிவில் வந்து கணக்கு காட்டியமையால் எழுத்தறிநாதர், அட்சரபுரிஸ்வரர் என்ற நாமங்களும் ஏற்பட்டன.

பதிகம் தொட்டால் துன்பமும் இடும்பையும் நம்மை அண்டாது!! அதற்கு இப்பதிகமே சான்று ............

பதிகம் தொட்டால் துன்பமும் இடும்பையும் நம்மை  அண்டாது!! 
அதற்கு இப்பதிகமே சான்று ............

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் அருளிய தேவாரம் (7 ம் திருமுறை)


திருக்கழுமலம்

                திருச்சிற்றம்பலம் 

1.சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை வகுத்து, தன் அருள் தந்த எம் தலைவனை; மலையின்
மாதினை மதித்து, அங்கு ஒர் பால் கொண்ட மணியை; வருபுனல் சடை இடை வைத்த எம்மானை;
ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை; எண் வகை ஒருவனை; எங்கள் பிரானை;
காதில் வெண்குழையனை; கடல் கொள மிதந்த கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .
2.மற்று ஒரு துணை இனி மறுமைக்கும் காணேன்; வருந்தல் உற்றேன்; மறவா வரம் பெற்றேன்;
சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன்; துணை என்று நான் தொழப்பட்ட ஒண்சுடரை,
முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை, அடியேன் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .
 
3.திருத் தினைநகர் உறை சேந்தன் அப்பன்(ன்), என் செய்வினை அறுத்திடும் செம்பொனை,அம் பொன்
ஒருத்தனை, அல்லது இங்கு ஆரையும் உணரேன்; உணர்வு பெற்றேன், உய்யும்  காரணம் தன்னால்;
விருத்தனை, பாலனை, கனவு இடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன்;
கருத்தனை, நிருத்தம் செய் காலனை, வேலைக் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .
 
4.மழைக்கு அரும்பும் மலர்க் கொன்றையினானை வளைக்கல் உற்றேன்; மறவா மனம் பெற்றேன்;
பிழைத்து ஒரு கால் இனிப் போய்ப் பிறவாமைப் பெருமை பெற்றேன்; பெற்றது ஆர் பெறுகிற்பார்?
குழைக் கருங்கண்டனைக் கண்டு கொள்வானே பாடுகின்றேன்; சென்று கூடவும் வல்லேன்;
கழைக் கரும்பும் கதலிப் பலசோலை கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .
 
5.“குண்டலம் குழை திகழ் காதனே!” என்றும், “கொடு மழுவாள் படைக் குழகனே!” என்றும்,
“வண்டு அலம்பும் மலர்க் கொன்றையன்!” என்றும், வாய் வெருவித் தொழுதேன்,விதியாலே;
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்று ஆய், பசுபதி பதி வினவி, பலநாளும்,
கண்டல் அம் கழிக் கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .
 
6.“வரும், பெரும் வல்வினை” என்று இருந்து எண்ணி, வருந்தல் உற்றேன்; மறவா மனம் பெற்றேன்;
விரும்பி, என் மனத்து இடை மெய் குளிர்ப்பு எய்தி, வேண்டி நின்றே தொழுதேன், விதியாலே;
அரும்பினை, அலரினை, அமுதினை, தேனை, ஐயனை, அறவன், என் பிறவி வேர் அறுக்கும்
கரும்பினை, பெருஞ் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .
 
7.அயலவர் பரவவும், அடியவர் தொழவும், அன்பர்கள் சாயலுள் அடையல் உற்று இருந்தேன்-
முயல்பவர் பின் சென்று, “முயல் வலை யானை படும்” என மொழிந்தவர் வழி முழுது எண்ணி;
புயலினை, திருவினை, பொன்னினது ஒளியை, மின்னினது உருவை, என் இடைப்  பொருளை,
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .
 
8.நினைதரு பாவங்கள் நாசங்கள் ஆக, நினைந்து முன் தொழுது எழப்பட்ட ஒண்சுடரை;
மனை தரு மலை மகள் கணவனை; வானோர் மாமணி மாணிக்கத்தை(ம்);மறைப்பொருளை;
புனைதரு புகழினை; எங்களது ஒளியை; இருவரும், “ஒருவன்” என்று உணர்வு அரியவனை;
கனை தரு கருங்கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .
 
9.மறை இடைத் துணிந்தவர் மனை இடை இருப்ப, வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாய,
துறை உறக் குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும் தக வின்மையை ஓரேன்;
பிறை உடைச் சடையனை, எங்கள் பிரானை, பேர் அருளாளனை, கார் இருள் போன்ற
கறை அணி மிடறு உடை அடிகளை, அடியேன் கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .
 
10.செழு மலர்க் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு
அழும் மலர்க் கண் இணை அடியவர்க்கு அல்லால், அறிவு அரிது, அவன் திருவடியிணை இரண்டும்;
கழுமல வள நகர்க் கண்டுகொண்டு, ஊரன்-சடையன் தன் காதலன்-பாடிய பத்தும்
தொழு மலர் எடுத்த கை அடியவர் தம்மைத் துன்பமும் இடும்பையும் சூழகிலாவே .
 
                திருச்சிற்றம்பலம் 

செவ்வாய், 20 டிசம்பர், 2022

அடியவர் இச்சையில் எவையெவை யுற்றனஅவைதருவித்தருள் பெருமாளே.!!!!!!!!!

 அடியவர் இச்சையில் எவையெவை யுற்றனஅவைதருவித்தருள் பெருமாளே!!!



அபிராமி என் தன் விழுத்துணையே!!!!!!!!!!!!!!!

என்னுடைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் முதற்கண் என் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.  அடியேன் சிறிது காலமாக சில வேலை பளு காரணமாக இந்த தலத்தில் பதிகம்கள்  இந்த வருடம்  நிறைய பதிவிட முடியவில்லை.  

ஆனால் இனி வரும் 2023 வருடம் நிறைய பதிகம்,திருப்புகழ் மற்றும் ஆன்மீகம் அனைத்தும் நம் தளத்தில் அடுத்து அடுத்து அடியேன் பதிவிட உள்ளேன்.

சைவ அன்பர்கள் நம் தளத்திற்கு வந்து   பதிகம் பல படித்து வாழ்வில் அபிராமி அம்மன்,ஈசன் கருணையினால் அனைத்து  வளமும்  நலமும் பெற்று இன்புற்றிருக்க  எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

 அடியவர் இச்சையில் எவையெவை யுற்றனஅவைதருவித்தருள் பெருமாளே.!!!


என்றும் அன்புடன் இறைபணியில்,

சிவ.பாகம்பிரியாள்.




வாழ்க்கையில் கேடில்லாத வாழ்வை பெற்று நிம்மதியாக வாழ பாட வேண்டிய பதிகம்

வாழ்க்கையில் கேடில்லாத வாழ்வை பெற்று நிம்மதியாக வாழ பாட வேண்டிய பதிகம் 

திருக்கீழ்வேளூர்(அப்பர் பெருமான் அருளியது)

இறைவன் :கேடிலியப்பர், அட்சயலிங்க சுவாமி

இறைவி:வனமூலையம்மன், சுந்தரகுஜாம்பிகை

திருத்தாண்டகம்

                             திருச்சிற்றம்பலம்

1 ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன் தன்னை,

       ஆன் அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க

தாளானை, தன் ஒப்பார் இல்லாதானை,

          சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த

தோளானை, தோளாத முத்து ஒப்பானை, தூ

         வெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த

கீளானை, கீழ் வேளூர் ஆளும் கோவை,

           கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.

2. சொல் பாவும் பொருள் தெரிந்து, தூய்மை நோக்கி,

          தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை;

நல் பான்மை அறியாத நாயினேனை நன்நெறிக்கே

                     செலும் வண்ணம் நல்கினானை;

பல்பாவும் வாய் ஆரப் பாடி, ஆடி, பணிந்து,

       எழுந்து, குறைந்து, அடைந்தார் பாவம் போக்க-

கிற்பானை; கீழ்வேளூர் ஆளும் கோவை;

             கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.

 

3. அளை வாயில் அரவு அசைத்த அழகன் தன்னை,

        ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும்

விளைவானை, மெய்ஞ்ஞானப் பொருள் ஆனானை,

           வித்தகனை, எத்தனையும் பத்தர் பத்திக்கு

உளைவானை, அல்லாதார்க்கு உளையாதானை,

       உலப்பு இலியை, உள் புக்கு என் மனத்து மாசு

கிளைவானை, கீழ்வேளூர் ஆளும் கோவை,

             கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.

 

4. தாள் பாவு கமல மலர் தயங்குவானைத் தலை

            அறுத்து மா விரதம் தரித்தான் தன்னை,

கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை,

   கொடுவினையேன் கொடு நரகக்குழியில் நின்றால்

மீட்பானை, வித்துருவின் கொத்து ஒப்பானை,

   வேதியனை, வேதத்தின் பொருள் கொள் வீணை

கேட்பானை, கீழ்வேளூர் ஆளும் கோவை,

          கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.

 

5. நல்லானை, நரை விடை ஒன்று ஊர்தியானை, நால்

              வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டாச்

சொல்லானை, சுடர் மூன்றும் ஆனான் தன்னை,

   தொண்டு ஆகிப் பணிவார்கட்கு அணியான் தன்னை,

வில்லானை, மெல்லியல் ஓர் பங்கன் தன்னை,

           மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க-

கில்லானை, கீழ்வேளூர் ஆளும் கோவை,

              கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.

 

6. சுழித்தானை, கங்கை; மலர் வன்னி, கொன்றை, தூ

                 மத்தம், வாள் அரவம், சூடினானை;

அழித்தானை, அரணங்கள் மூன்றும் வேவ;

          ஆலால-நஞ்சு அதனை உண்டான் தன்னை;

விழித்தானை, காமன் உடல் பொடி ஆய் வீழ;

    மெல்லியல் ஓர் பங்கனை; முன் வேல் நல் ஆனை

கிழித்தானை; கீழ்வேளூர் ஆளும் கோவை;

             கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.

 

7. உளர் ஒளியை, உள்ளத்தினுள்ளே நின்ற

         ஓங்காரத்து உள்பொருள் தான் ஆயினானை,

விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும்

   ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை,

வளர் ஒளியை, மரகதத்தின் உருவினானை,

        வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும்

கிளர் ஒளியை, கீழ்வேளூர் ஆளும் கோவை,

            கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.

 

8. தடுத்தானை, காலனைக் காலால் பொன்ற; தன்

    அடைந்த மாணிக்கு அன்று அருள் செய்தானை;

உடுத்தானை, புலி அதளோடு அக்கும் பாம்பும்;

        உள்குவார் உள்ளத்தின் உள்ளான் தன்னை;

மடுத்தானை, அரு நஞ்சம் மிடற்றுள்-தங்க;

         வானவர்கள் கூடிய அத் தக்கன் வேள்வி

கெடுத்தானை; கீழ்வேளூர் ஆளும் கோவை;

         கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.


 

9. மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை,

     மயானத்தில் கூத்தனை, வாள் அரவோடு என்பு

பூண்டானை, புறங்காட்டில் ஆடலானை, போகாது

         என் உள் புகுந்து இடம் கொண்டு என்னை

ஆண்டானை, அறிவு அரிய சிந்தையானை,

    அசங்கையனை, அமரர்கள் தம் சங்கை எல்லாம்

கீண்டானை, கீழ்வேளூர் ஆளும் கோவை,

            கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.

10. முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான் தானும்

       முதுகு இற, முன்கைந் நரம்பை எடுத்துப் பாட,

பறிப்பான் கைச் சிற்றரிவாள் நீட்டினானை;

          பாவியேன் நெஞ்சு அகத்தே பாதப் போது

பொறித்தானை; புரம் மூன்றும் எரி செய்தானை;

     பொய்யர்களைப் பொய் செய்து போது போக்கிக்

கிறிப்பானை; கீழ்வேளூர் ஆளும் கோவை;

            கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.


       திருச்சிற்றம்பலம்

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...