புதன், 24 ஜூலை, 2019

உண்ண உணவும்,உடுக்க உடையும் குறைவின்றி கிடைக்க பாடவேண்டிய பதிகம்

உண்ண உணவும்,உடுக்க உடையும் குறைவின்றி கிடைக்க பாடவேண்டிய பதிகம் 

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய பதிகம் 

 திருப்புகலூர் 

திருச்சிற்றம்பலம் 

1.தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப் 
பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்! 
இம்மையே தரும், சோறும் கூறையும்; ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்; 
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
 
2.மிடுக்கு இலாதானை, “வீமனே; விறல் விசயனே, வில்லுக்கு இவன்;” என்று, 
கொடுக்கிலாதானை, “பாரியே!” என்று, கூறினும் கொடுப்பார் இலை; 
பொடிக் கொள் மேனி எம் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! 
அடுக்கு மேல் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

3.“காணியேல் பெரிது உடையனே! கற்று நல்லனே! சுற்றம், நல் கிளை, 
பேணியே விருந்து ஓம்புமே!” என்று பேசினும் கொடுப்பார் இலை; 
பூணி பூண்டு உழப் புள் சிலம்பும் தண் புகலூர் பாடுமின், புலவீர்காள்! 
ஆணி ஆய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
 
4.நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இக் கிழவனை, 
“வரைகள் போல்-திரள் தோளனே!” என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை; 
புரை வெள் ஏறு உடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! 
அரையனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
 
5.வஞ்சம் நெஞ்சனை, மா சழக்கனை, பாவியை, வழக்கு இ(ல்)லியை, 
பஞ்சதுட்டனை, “சாதுவே!” என்று பாடினும் கொடுப்பார் இலை; 
பொன் செய் செஞ்சடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! 
நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சு போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
 
6.நலம் இலாதானை, “நல்லனே!” என்று, நரைத்த மாந்தரை, “இளையனே!”, 
குலம் இலாதானை, “குலவனே!” என்று, கூறினும் கொடுப்பார் இலை; 
புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! 
அலமரது அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
 
7.நோயனை, “தடந்தோளனே!” என்று, நொய்ய மாந்தரை, “விழுமிய 
தாய் அன்றோ, புலவோர்க்கு எலாம்!” என்று, சாற்றினும் கொடுப்பார் இலை; 
போய் உழன்று கண் குழியாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்! 
ஆயம் இன்றிப் போய் அண்டம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
 
8.எள் விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும், ஈக்கும் ஈகிலன் ஆகிலும், 
“வள்ளலே! எங்கள் மைந்தனே!” என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை; 
புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! 
அள்ளல்பட்டு அழுந்தாது போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
 
9.கற்றிலாதானை, “கற்று நல்லனே!”, “காமதேவனை ஒக்குமே”, 
முற்றிலாதானை, “முற்றனே!”, என்று மொழியினும் கொடுப்பார் இலை; 
பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! 
அத்தனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
 
10.“தையலாருக்கு ஒர் காமனே!” என்றும், “சால நல அழகு உடை ஐயனே!” 
“கை உலாவிய வேலனே!” என்று, கழறினும் கொடுப்பார் இலை; 
பொய்கை ஆவியில் மேதி பாய் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! 
ஐயனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
 

திருச்சிற்றம்பலம் 

செவ்வாய், 23 ஜூலை, 2019

பசிப்பிணி தீரவும்,என்றும் உணவு குறைவின்றி கிடைக்கவும் பாட வேண்டிய பதிகம்

பசிப்பிணி தீரவும்,என்றும் உணவு குறைவின்றி கிடைக்கவும் பாட வேண்டிய பதிகம் 

சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய பதிகம் 

திருச் சோற்றுத்துறை 

குறிப்பு:(தலச் சிறப்பு: இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத் தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப்பிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. இது காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும். சிறந்த சிவபக்தரான அருளாளருக்காக அட்சய பாத்திரம் அருளிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் இத்தலம் சப்தஸ்நான தலங்களில் ஒன்றாகும். அடியவர்களது பசிப்பிணியைப் போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் இந்த ஊருக்கு திருச்சோற்றுத்துறை எனும் பெயர் ஏற்பட்டது.)

திருச்சிற்றம்பலம் 

1.அழல் நீர் ஒழுகியனைய சடையும், 
உழை ஈர் உரியும், உடையான் இடம் ஆம்- 
கழை நீர் முத்தும் ககைக்குவையும் 
சுழல் நீர்ப் பொன்னி-சோற்றுத்துறையே.
 
2.பண்டை வினைகள் பறிய நின்ற 
அண்ட முதல்வன், அமலன், இடம் ஆம்- 
இண்டை கொண்டு அன்பு இடை அறாத 
தொண்டர் பரவும்-சோற்றுத்துறையே.
 
3.கோல அரவும், கொக்கின் இறகும், 
மாலை மதியும், வைத்தான் இடம் ஆம்- 
ஆலும் மயிலும், ஆடல் அளியும், 
சோலை தரு நீர்-சோற்றுத்துறையே.
 
4.பளிக்குத்தாரை பவளவெற்பில் 
குளிக்கும் போல் நூல் கோமாற்கு இடம் ஆம்- 
அளிக்கும் ஆர்த்தி, அல்லால் மதுவும் 
துளிக்கும் சோலை-சோற்றுத்துறையே.

5.உதையும், கூற்றுக்கு; ஒல்கா விதிக்கு 
வதையும்; செய்த மைந்தன் இடம் ஆம்- 
திதையும் தாதும் தேனும் ஞிமிறும் 
துதையும் பொன்னி-சோற்றுத்துறையே.
 
6.ஓதக்கடல் நஞ்சினை உண்டிட்ட 
பேதைப்பெருமான் பேணும் பதி ஆம்- 
சீதப்புனல் உண்டு எரியைக் காலும் 
சூதப்பொழில் சூழ்-சோற்றுத்துறையே.
 
7.இறந்தார் என்பும், எருக்கும், சூடிப் 
புறங்காட்டு ஆடும் புனிதன் கோயில்- 
சிறந்தார், சுற்றம், திரு, என்று இன்ன 
துறந்தார் சேரும்-சோற்றுத்துறையே.
 
8.காமன் பொடியாக் கண் ஒன்று இமைத்த 
ஓமக் கடலார் உகந்த இடம் ஆம்- 
தேமென்குழலார் சேக்கை புகைத்த 
தூமம் விசும்பு ஆர்-சோற்றுத்துறையே.
 
9.இலையால், அன்பால், ஏத்துமவர்க்கு 
நிலையா வாழ்வை நீத்தார் இடம் ஆம்- 
தலையால்-தாழும் தவத்தோர்க்கு என்றும் 
தொலையாச் செல்வ-சோற்றுத்துறையே.
 
10.சுற்று ஆர் தரு நீர்ச் சோற்றுத்துறையுள் 
முற்றா மதி சேர் முதல்வன் பாதத்து 
அற்றார் அடியார் அடி நாய் ஊரன் 
சொல்-தான் இவை கற்றார் துன்பு இலரே.

திருச்சிற்றம்பலம்  

திருமணத்தடை நீங்கி, ஆண்,பெண் இருபாலருக்கும் விரைவில் திருமணம் நடைபெற பாட வேண்டிய திருப்புகழ்

திருமணத்தடை நீங்கி, ஆண்,பெண் இருபாலருக்கும் விரைவில் திருமணம் நடைபெற பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 

பொது 

"வேலும் மயிலும் சேவலும் துணை"

நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
   நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
      மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
         மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே

வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
   வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
      நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
         நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

நினைத்த காரியம் இனிதே நடைபெற பாட வேண்டிய திருப்புகழ்

நினைத்த காரியம் இனிதே நடைபெற பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 

திருத்தணிகை 

"வேலும் மயிலும் சேவலும் துணை"

நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல்
     நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற்

கனத்த தத்துவமுற் ...... றழியாமற்
     கதித்த நித்தியசித் ...... தருள்வாயே

மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே
     மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே

செனித்த புத்திரரிற் ...... சிறியோனே
     திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

ஞாயிறு, 14 ஜூலை, 2019

மனம் தெளிவு பெற்று தெளிந்த சிந்தனையுடன் இன்பமாக வாழவும்,இறுதியில் சிவலோகத்தை அடையவும் பாட வேண்டிய அப்பர் பெருமான் பதிகம்

மனம் தெளிவு பெற்று, தெளிந்த சிந்தனையுடன் இன்பமாக வாழவும்,இறுதியில் சிவலோகத்தை அடையவும் பாட வேண்டிய அப்பர் பெருமான் பதிகம் 

இறைவன் - மாணிக்கவண்ணர், ரத்னகிரீஸ்வரர்.

இறைவி - வண்டுவார்குழலி, ஆமோதாளகநாயகி.



அப்பர் பெருமான் 

திருமருகல் 
திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம் 

1.பெருகல் ஆம், தவம்; பேதைமை தீரல் ஆம்; 
திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம்; 
பருகல் ஆம், பரம் ஆயது ஓர் ஆனந்தம்- 
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.

2.பாடம் கொள் பனுவல்-திறம் கற்றுப் போய், 
நாடு அங்கு உள்ளன தட்டிய நாண் இலீர்! 
மாடம் சூழ் மருகல் பெருமான் திரு 
வேடம் கைதொழ, வீடு எளிது ஆகுமே.

3.சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை- 
அனைத்தும் நீங்கி நின்று, ஆதரவு ஆய், மிக 
மனத்தினால் மருகல் பெருமான் திறம் 
நினைப்பினார்க்கு இல்லை, நீள் நில வாழ்க்கையே.

4.ஓது பைங்கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி, 
பாதுகாத்துப் பலபல கற்பித்து, 
மாதுதான், மருகல் பெருமானுக்குத் 
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.

5.இன்ன ஆறு என்பது உண்டு அறியேன்; இன்று 
துன்னு கைவளை சோர, கண் நீர் மல்கும்; 
மன்னு தென் மருகல் பெருமான் திறம் 
உன்னி, ஒண்கொடி உள்ளம் உருகுமே.

6.சங்கு சோர, கலையும் சரியவே, 
மங்கைதான், மருகல் பெருமான் வரும் 
அங்கவீதி அருகு அணையா நிற்கும்; 
நங்கைமீர்! இதற்கு என் செய்கேன், நாளுமே?

7.காட்சி பெற்றிலள் ஆகிலும், காதலே 
மீட்சி ஒன்று அறியாது மிகுவதே? 
மாட்சி ஆர் மருகல் பெருமானுக்குத் 
தாட்சி சால உண்டாகும்!-என் தையலே.

9.நீடு நெஞ்சுள் நினைந்து, கண் நீர் மல்கும், 
ஓடும் மாலினோடு, ஒண் கொடிமாதராள், 
ழுமாடம் நீள் மருகல் பெருமான் வரில் 
கூடு, நீ!ழு என்று கூடல் இழைக்குமே.

10.கந்தவார் குழல் கட்டிலள், காரிகை 
அந்தி, மால் விடையோடும் அன்பு ஆய் மிக 
வந்திடாய், மருகல் பெருமான்!ழு என்று 
சிந்தைசெய்து திகைத்திடும்; காண்மினே!

11.ஆதி மாமலை அன்று எடுத்தான் இற்று, 
சோதி! என்றலும், தொல் அருள் செய்திடும் 
ஆதியான், மருகல் பெருமான், திறம் 
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.

திருச்சிற்றம்பலம் 

புதன், 10 ஜூலை, 2019

2.வறுமை நீங்கி செல்வ வளம் பெற பாட வேண்டிய திருப்புகழ்

2.வறுமை நீங்கி செல்வ வளம் பெற பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 



சுவாமிமலை

"வேலும் மயிலும் சேவலும் துணை"

வறுமைப் பாழ்பிணி ஆற்றப்ப டாதுளம்
     உருகிப் போனது தேற்றப்ப டாதினி
          மகிமைக் கேடுகள் பார்க்கப்ப டாதென ...... அழையாயோ

வலியப் போய்உடல் கூச்சப்ப டாமையும்
     இடியப் பேசிய நாசிக்க லாமையும்
          மறுசொற் காதுகள் கேட்கப்ப டாமையும் ...... வரலாமோ

கறுவிப் பாய்புலி வேட்டைக்கு ளேவரு
     பசுவைப் போல்மிடி யாற்பட்ட பாடெழு
          கதையைப் பாரினி லார்க்குச்சொல் வேனினம் ...... அறியாயோ

கவலைச் சாகர நீச்சுக்கு ளேஉயிர்
     தவறிப் போம்என ஓட்டத்தில் ஓடியே
          கருணைத் தோணியில் ஏற்றிக்கொள் வாயினி ...... அலையாதே

குறைபட் டேஉயிர் காத்துக்கொள் வாயென
     முறையிட் டோர்கரி கூப்பிட்ட நாளொரு
          குரலிற் போய்உயிர் மீட்டுக்கொள் வோர்திரு ...... மருகோனே

குளிர்முத் தாலணி மூக்குத்தி யோடணி
     களபப் பூண்முகை பார்த்துப்பெண் மோகினி
          குவளைப் பார்வையில் மாட்டிக் கொளாதருள் ...... குருநாதா

நிறையத் தேன்விழு பூக்கொத்தி லேகனி
     கிழியத் தான்விழு காய்கொத்தி லேமயில்
          நடனக் கால்படு தோப்புக்கு ளேகயல் ...... வயலூடே

நதியைக் காவிரி யாற்றுக்கு ளேவரு
     வளமைச் சோழநன் நாட்டுக்கு ளேரக
          நகரிற் சீர்பெறு மோட்சத்தை யேதரு ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"


1.வாழ்க்கையில் செல்வ வளமும்,நலமும் பெற பாட வேண்டிய திருப்புகழ்

1.வாழ்க்கையில்  செல்வ வளமும்,நலமும் பெற பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 

திருவிடைக்கழி



"வேலும் மயிலும் சேவலும் துணை"

பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
     பயனு மெப்படிப் ...... பலவாழ்வும்

பழைய முத்தியிற் பதமு நட்புறப்
     பரவு கற்பகத் ...... தருவாழ்வும்

புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
     பொலியும் அற்புதப் ......பெருவாழ்வும்

புலன கற்றிடப் பலவி தத்தினைப்
     புகழ்ப லத்தினைத் ...... தரவேணும்

தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
     சரவ ணத்தினிற் ...... பயில்வோனே

தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
     தழுவு பொற்புயத் ...... திருமார்பா

சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
     திறல யிற்சுடர்க் ...... குமரேசா

செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்
     றிருவி டைக்கழிப் ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

எம பயம் நீக்கி முருகன் அருள் பெற பாட வேண்டிய திருப்புகழ்

எம பயம் நீக்கி முருகன் அருள் பெற பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 

சுவாமிமலை



"வேலும் மயிலும் சேவலும் துணை"

பாதி மதிநதி போது மணிசடை
     நாத ரருளிய ...... குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ...... மணவாளா

காது மொருவிழி காக முறஅருள்
     மாய னரிதிரு ...... மருகோனே

கால னெனையணு காம லுனதிரு
     காலில் வழிபட ...... அருள்வாயே

ஆதி யயனொடு தேவர் சுரருல
     காளும் வகையுறு ...... சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்
     சூழ வரவரு ...... மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
     வாமி மலைதனி ...... லுறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட
     வேலை விடவல ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

செவ்வாய், 9 ஜூலை, 2019

மனக்கவலை அகற்றி பேரின்பம் அளிக்கும் சிவபுராணம்

மனக்கவலை அகற்றி பேரின்பம் அளிக்கும் சிவபுராணம் 

சிவபுராணம் 
(திருப்பெருந்துறையில் அருளியது)

தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க — 5

வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க — 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி — 15

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். — 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் — 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் — 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே — 35

வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே — 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே — 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை — 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, — 55

விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் — 60

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் — 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே — 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் — 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் — 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று — 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே — 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. — 95

திருச்சிற்றம்பலம் 

வெள்ளி, 5 ஜூலை, 2019

2.சத்ரு பயம் நீக்கும் வேல்மாறல் பதிகம் ( ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க பாட வேண்டிய பதிகம்

2.சத்ரு பயம் நீக்கும் வேல்மாறல் பதிகம் 

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளிய   'வேல் மாறல்'



குறிப்பு :
பஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடைத்து, அந்த யந்திரங்களைப் பூஜை செய்வதால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். அந்த முறையில் இந்த ‘வேல்மாறல்’ அமைப்பையும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கியுள்ளார்.

வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும்.

வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது மிகவும் அவசியம். (வைத்தியர்கள் நோய்க்கு உரிய மருந்தை ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுவார்கள் அல்லவா? அம்முறையிலே வேல்மாறல் பாராயணத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும்) இதனை ஆண், பெண் மற்றும் சாதிமத பேதம் இல்லாமல் யாவரும் பாராயணம் செய்யலாம். நோய், வாழ்க்கைச் சிக்கல் முதலான பிரச்னைகள் இல்லாதவர்கள்கூட இதனைப் பாராயணம் செய்வதால் மேலும் மன உறுதி மன மகிழ்ச்சி, மன நிறைவு உண்டாகும் என்பதில் ஐயமில்லை.


ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற் பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும். அதிலும், கார்த்திகேயக் கடவுளாம் முருகனுக்கு உகந்த திருக்கார்த்திகை புண்ணிய மாதத்தில், வேல் மாறல் பாராயணம் செய்வது மிகுந்த விசேஷம்!)

"வேலும் மயிலும் சேவலும் துணை"

விநாயகர் வணக்கம் (கந்தர் அனுபூதி)
நெஞ்சக் கனகல் லும்நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ் சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கரஆனைபதம் பணிவாம்

முருகன் பெருமை (அலங்கரம்)
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.

மயிலின் திரம் (கந்தர் அலங்கரம்)
தடக்கொற்ற வேள்மயி லேஇடர் தீரத் தனிவிடில்நீ
வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் தோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்

திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே.

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

( ... இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் ... )

( ... பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் "திரு" என்ற
இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் ... )

  1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

  2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

  3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
         அடுத்தபகை அறுத்(து)எறிய
         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

  4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

  5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

  6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
         கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

  7. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

  8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

  9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
         கவிப்புலவன் இசைக்(கு)உருகி
         வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
         முளைத்த(து)என முகட்டின்இடை
         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
         பெருத்தகுடர் சிவத்ததொடை
         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

17. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

18. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
         பெருத்தகுடர் சிவத்ததொடை
         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

22. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
         கவிப்புலவன் இசைக்(கு)உருகி
         வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
         முளைத்த(து)என முகட்டின்இடை
         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

25. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

28. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
         கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
         அடுத்தபகை அறுத்(து)எறிய
         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

31. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

32. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
         அடுத்தபகை அறுத்(து)எறிய
         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

35. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

36. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

38. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

39. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
         கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

40. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

41. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
         முளைத்த(து)என முகட்டின்இடை
         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
         கவிப்புலவன் இசைக்(கு)உருகி
         வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

45. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
         பெருத்தகுடர் சிவத்ததொடை
         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

46. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

51. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
         பெருத்தகுடர் சிவத்ததொடை
         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

52. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
         முளைத்த(து)என முகட்டின்இடை
         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
         கவிப்புலவன் இசைக்(கு)உருகி
         வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

55. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

57. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
         கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

60. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

61. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

62. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
         அடுத்தபகை அறுத்(து)எறிய
         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

65. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

( ... முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் ... )

        தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
        கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
        நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
        பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.

        வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
        தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
        குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்

        தொளைத்தவேல் உண்டே துணை.


"வேலும் மயிலும் சேவலும் துணை"









1.சத்ரு சங்கார (சம்ஹார) வேல் பதிகம் - சத்ருக்களால் ஏற்படும் பயம்,தொல்லை நீங்கவும், தீவினைகள் நீங்கி நலம் பல பெறவும் பாட வேண்டிய பதிகம்

சத்ருக்களால் ஏற்படும் பயம்,தொல்லை நீங்கவும், தீவினைகள் நீங்கி நலம் பல பெறவும் பாட வேண்டிய பதிகம் 

பாலன் தேவராய ஸ்வாமிகள் அருளியது 



வேலும் மயிலும் சேவலும் துணை

சண்முகக் கடவுள் போற்றி ! 
சரவணத் துதித்தாய் போற்றி 
கண்மணி முருகா போற்றி ! 
கார்த்திகை பாலா போற்றி ! 
தண் மலர் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி ! 
விண்மதி வதன-வள்ளி வேலவா போற்றி ! போற்றி ! 

1.அப்பமுடன் அதிரசம் பொறிக் கடலை 
துவரை வடை அமுது செய் இப-முகவனும், 
ஆதி கேசவன் லட்சுமி திங்கள் 
தினகரன் ஐராவதம் வாழ்கவே ! 
முப்பத்து முக்கோடி வானவர்கள் 
இடர் தீர முழுது பொன்னுலகம் வாழ்க ! 
மூவரொடு கருட கந்தருவர் கிம்புருடரும் 
முது மறைக் கிழவர் வாழ்க ! 
செப்பரிய இந்திரன் தேவி அயிராணி தன் 
திருமங்கலம் வாழ்கவே ! 
சித்த வித்யாதரர் கின்னரர்கள் 
கனமான தேவதைகள் முழுதும் வாழ்க ! 
சப்த கலை விந்துக்கும் ஆதியாம் அதி ரூப 
சரஹ(வ)ணனை நம்பினவர் மேல் 
தர்க்கமிட நாடினரைக் குத்தி 
எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே ! 


2.சித்தி சுந்தரி கௌரி அம்பிகை கிருபாநிதி 
சிதம்பரி சுதந்தரி பரசிற்பரி 
சுமங்கலி நிதம்பரி விடம்பரி 
சிலாசுத விலாச விமலி 
கொத்து திரிசூலி திரிகோணத்தி 
ஷட்கோண குமரி கங்காளி ருத்ரி 
குலிச ஓம்காரி ரீங்காரி ஆங்காரி 
ஓங்காரி ரீன்காரி அம்பா 
முத்தி காந்தாமணி முக்-குண 
சுந்தரி மூவர்க்கு முதல்வி 
ஞான முதுமறைக் கலைவாணி அற்புத 
புராதனி மூவுலகும் ஆனா ஜோதி 
சக்தி சங்கரி நீலி கமலி பார்வதி தரும் 
சரஹ(வ)ணனை நம்பினவர் மேல் 
தர்க்கமிட நாடினரைக் குத்தி 
எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே ! 

3.மூரியுள முப்பத்து முக்கோடி 
தேவரும் முனிவரோடும் அசுரர் கூடி 
முழு மந்தர கிரி தன்னை மத்தாகவே 
செய்து முற்கணத்து அமுது பெறவே 
கோரமுள வாசுகியின் ஆயிரம் 
பகுவாயில் கொப்பளித்திடு விடங்கள் 
கோளகையு மண்டலங்கள் யாவையும் 
எரித்திடும் கொடிய வர வினைப் பிடித்து 
வீரமுடன் வாயினாற் குத்தி உதிரம் 
பரவ இரு தாளிலே மிதித்து விரித்துக் 
கொழும் சிறகடித்தே எடுத்துதரும் 
விதமான தோகை மயில் 
சாரியாய் தினமேறி விளையாடி வரு முருக 
சரஹ(வ)ணனை நம்பினவர் மேல் 
தர்க்கமிட நாடினரைக் குத்தி 
எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே ! 

4.உக்ரமுள தாருகன் சிங்கமா சூரனும் 
உன்னுதற்கு அறிய சூரன் 
உத்தி கொளும் அக்நிமுகன் பானுகோபன் 
முதல் உத்தண்ட அசுரர் முடிகள் 
நெக்கு விட கரி புரவி தேர்கள் 
வெள்ளம் கோடி நெடிய பாசங்கள் கோடி 
நிறையிலா வஸ்திரம் வெகு கோடிகள் 
குருதி நீரில் சுழன்று உலவவே 
தொக்கு தொகு திதி திதிமி டுண் டுடுடு 
டகுகு டிகு துந்துமி தகு குதி திகுதை தோத்தி 
மிடங்கு குகு டிங்கு குகு 
சங்குஎன தொந்தக் கவந்தம் ஆட 
சக்ரமொடு சத்தி -விடு-தணிகை சென்னியில் வாழும் 
சரஹ(வ)ணனை நம்பினவர் மேல் 
தர்க்கமிட நாடினரைக் குத்தி 
எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே ! 

5.அந்தியில் பேச்சி, உருமுனிக் காட்டேரி, 
அடங்காத பகல் இரிசியும், 
அகோர-கண்டம், கோர-கண்ட-சூன்யம், 
பில்லி, அஷ்ட-மோகினி, பூதமும், 
சந்தியான வசுகுட்டி, சாத்தி , 
வேதாளமும், சாகினி, இடாகினிகளும், 
சாமுண்டி, பகவதி, ரத்தக்-காட்டேரி, 
முதல் சஞ்சரித்திடு முனிகளும், 
சிந்தை நொந்தலறி திரு வெண்ணீறு காணவே 
தீயிலிடும் மெழுகு போல 
தேகமெல்லாம் கருகி, நீறாகவே நின்று 
சென்னியிறு தணிகை மலையில் 
சந்ததம் கலியாண சாயுஜ்ய பதம் அருளும் 
சரஹ(வ)ணனை நம்பினவர் மேல் 
தர்க்கமிட நாடினரைக் குத்தி 
எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே !

6.கண்ட விட பித்தமும், வெப்பு, தலைவலி, வெடிப்பு, 
இருமல், காமாலை, சூலை, குஷ்டம், 
கண்ட மாலைத், தொடை வாழை, வாய்ப் 
புற்றினொடு, கடினமாம் பெரு வியாதி, 
அண்டொணாதச் சுரம், சீத வாதச் சுரம் , 
ஆறாத பிளவை, குன்மம் 
அடங்காத விறும்பஃது மேகமுடனால் 
உலகத்தில் எண்ணாயிரம் பேர் 
கொண்டதொரு நோய்களும் 'வேல்' என்று 
உரைத்திடக் கோவென்ன ஓலமிட்டு 
குலவு தினகரன் முன் மஞ்சு போல் 
நீங்கிடும் குருபரன் நீறு அணிந்து 
சண்ட மாருத கால உத்தண்ட கெம்பீர 
சரஹ(வ)ணனை நம்பினவர் மேல் 
தர்க்கமிட நாடினரைக் குத்தி 
எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே !

7.மக மேரு, உதயகிரி, அஸ்திகிரியும், 
சக்ரவாளக் கிரி , நிடத, விந்தம், 
மா உக்ர-தர நரசிம்மகிரி, அத்திகிரி 
மலைகளோடு வதன சுமவா 
ஜெகம் எடுத்திடு புட்ப தந்தம், 
அயிராவதம் , சீர் புண்டரீக் குமுதம், 
செப்பு சாருவ பூமி மஞ்சனம், 
சுப்பிர தீப வாமனம், ஆதி வாசுகி, 
மகா பதுமன், ஆனந்த கார்க்கோடகன், 
சொற்-சங்க பால குளிகன் , 
தூய-தக்கன், பதும-சேடனோடு, 
அரவெலாம் துடித்துப் பதைத்து அதிரவே 
தக தகென நடனமிடு மயில் ஏறி விளையாடும் 
சரஹ(வ)ணனை நம்பினவர் மேல் 
தர்க்கமிட நாடினரைக் குத்தி 
எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே !

8.திங்கள் பிரமாதியரும், இந்திராதி தேவரும், 
தினகரரும், முனிவரோடு சித்திர புத்திரர், மௌலி அகலாமல் 
இருபாதம் சேவித்து நின்று தொழவும், 
மங்கை திருவாணியும் , அயிராணியொடு, 
சத்த மாதர் இரு தாள் பணியவும், 
மகாதேவர் செவி கூறப் பிரணவம் உரைத்திட 
மலர்ந்த செவ்வாய்கள் ஆறும், 
கொங்கை, களபம், புணுகு, சவ்வாது 
மணி வள்ளி , குமரி தெய்வானை-யுடனே 
கோதண்ட பாணியும் , நான்முகனும் 
புகழ் குலவு திருத்தணிகை மலை வாழ் 
சங்கு சக்கரம் அணியும், பங்கயக் கரம் - குமர 
சரஹ(வ)ணனை நம்பினவர் மேல் 
தர்க்கமிட நாடினரைக் குத்தி 
எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே !

9.மண்டலம் பதினாலு லோகமும் 
அசைந்திட , வாரிதி ஒரு ஏழும் வரள, 
வலிய அசுரர் முடிகள் பொடி படக் 
கிரவுஞ்ச மாரி எழத், தூளியாகக் 
கொண்டன், இறமெனும் அசுரர் அண்டங்கள் 
எங்குமே கூட்டமிட்டு ஏக , 
அன்னோர் குடல், கை, காலுடன், மூளை, தலைகள் 
வெவ்-வேறு-ஆகக் குத்திப் பிளந்து எரிந்து 
அண்டர்பணி கதிர்காமம், பழனி 
சுப்பிரமணியம், ஆவினன்குடி யோகம், 
அருணாசலம், கயிலை, தணிகைமலை, 
மீதில்-உரை ஆறுமுகப் பரம குருவாம் 
சண்ட மாருத கால சம்மார அதி தீரா 
சரஹ(வ)ணனை நம்பினவர் மேல் 
தர்க்கமிட நாடினரைக் குத்தி 
எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே !

10.மச்சம் குதித்து நவமணி தழுவ 
வந்த நதி வையாபுரி பொய்கையும் 
மதிய முத்தம் செய்யும் பொற்கோபுரத்து 
ஒளியும், வான் மேவு கோயில் அழகும் 
உச்சிதமதான திரு ஆவினன் குடியில் 
வாழ் உம்பரிட முடி நாயக 
உக்ர மயில் ஏறி வரு முருக! சஹ(ர)வண பவ! 
ஓம்கார சிற்சொரூப வேல் ! 
அச்சுத ! கிருபாகர ! ஆனை முறை 
செய்யவே, ஆழியை விடுத்து, ஆனையை 
அன்புடன் ரட்சித்த திருமால் ! முகுந்தன் ! 
எனும் அரி கிருஷ்ண ராமன் மருகன் ! 
சச்சிதானந்த பரமானந்த சுரர் தந்த 
சரஹ(வ)ணனை நம்பினவர் மேல் 
தர்க்கமிட நாடினரைக் குத்தி 
எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே !

வேலும் மயிலும் சேவலும் துணை

வியாழன், 4 ஜூலை, 2019

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அம்மைப்பதிகம் சகல செல்வ யோகம் பெற்று வாழ்வாங்கு வாழ பட வேண்டிய பதிகம்

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அம்மைப்பதிகம் சகல செல்வ யோகம் பெற்று வாழ்வாங்கு வாழ பட வேண்டிய பதிகம் 


குறிப்பு :(இந்த அருமையிலும் அருமையான அபிராமி அம்மைப்பதிகத்தை  படிப்பதால் , கடன் தொல்லை நீங்கி நிறைந்த செல்வமும்,எம பயமின்றி, நீண்ட ஆயுளும் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.மேலும் செல்லும் இடமெல்லாம் அபிராமி அம்மை வழித்துணை வருவாள்.)


காப்பு 

தூய தமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதன் நால்
வாய் ஐங்கரன் தாள் வழுத்துவாம் - நேயர் நிதம்
எண்ணும் புகழ்க் கடவூர் எங்கள் அபிராமவல்லி 
நண்ணும் பொற்பாதத்தில் நன்கு......

1.கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும் கலா மதியை நிகர் வதனமும்
கருணை பொழி விழிகளும் விண் முகில்கள் வெளிறெனக் காட்டிய கரும் கூந்தலும்
சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணம் தங்கு மணி மிடறும் மிக்க
சதுர் பெருகு துங்க பாசாங்குசம் இலங்கு சதுர் கரதலமும் விரல் அணியும் அரவும்
புங்கவர்க்கு அமுது அருளும் அந்தர குசங்களும் பொலியும் நவமணி நூபுரம்
பூண்ட செஞ்சேவடியை நாளும் புகழ்ந்துமே போற்றி என வாழ்த்த விடைமேல்
மங்களம் மிகுந்த நின் பதியுடன் வந்து அருள்செய் வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே...


2.கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே...


3.சந்திர சடாதரி முகுந்த சோதரி துங்க சலச லோசன மாதவி
சம்ப்ரம பயோதரி சுமங்கலி சுலட்சணி சாற்ற அரும் கருணாகரி
அந்தரி வராகி சாம்பவி அமர தோத்ரி அமலை செகசால சூத்ரி
அகில ஆத்ம காரணி வினோத சய நாரணி அகண்ட சின்மய பூரணி
சுந்தரி நிரந்தரி துரந்தரி வரை ராச சுகுமாரி கௌமாரி உத்-
துங்க கல்யாணி புஷ்பாஸ்திராம் புய பாணி தொண்டர்கட்கு அருள் சர்வாணி
வந்து அரி மலர்ப் பிரமராதி துதி வேத ஒலிவளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே...


4.கார் அளக பந்தியும் பந்தியின் அலங்கலும் கரிய புருவச் சிலைகளும்
கர்ண குண்டலமும் மதிமுக மண்டலமும் நுதல் கத்தூரிப் பொட்டும் இட்டுக்
கூர் அணிந்திடு விழியும் அமுத மொழியும் சிறிய கொவ்வையின் கனி அதரமும்
குமிழ் அனைய நாசியும் குந்த நிகர் தந்தமும் கோடு சோடான களமும்
வார் அணிந்து இறுமாந்த வனமுலையும் மேகலையும் மணி நூபுரப் பாதமும்
வந்து எனது முன் நின்று மந்தகாசமுமாக வல்வினையை மாற்றுவாயே
ஆர மணி வானில் உறை தாரகைகள் போல நிறை ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே...


5.வாச மலர் மருவளக பாரமும் தண் கிரண மதி முகமும் அயில் விழிகளும்
வள்ள நிகர் முலையும் மான் நடையும் நகை மொழிகளும் வளமுடன் கண்டு மின்னார்
பாச பந்தத்திடை மனம் கலங்கித் தினம் பல வழியும் எண்ணி எண்ணிப்
பழி பாவம் இன்னது என்று அறியாமல் மாயப்ரபஞ்ச வாழ்வு உண்மை என்றே
ஆசை மேலிட்டு வீணாக நாய் போல் திரிந்து அலைவது அல்லாமல் உன்றன்
அம்புயப் போதெனும் செம்பதம் துதியாத அசடன் மேல் கருணை வருமோ
மாசு இலாது ஓங்கிய குணாகரி பவானி சீர்வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே...


6.மகர வார் குழை மேல் அடர்ந்து குமிழ் மீதினில் மறைந்து வாளைத் துறந்து
மைக் கயலை வேண்டி நின் செங்கமல விழி அருள் வரம் பெற்ற பேர்கள் அன்றோ
செகம் முழுதும் ஒற்றைத் தனிக்குடை கவித்து மேல் சிங்க ஆதனத்தில் உற்றுச்
செங்கோலும் மனுநீதி முறைமையும் பெற்று மிகு திகிரி உலகு ஆண்டு பின்பு
புகர் முகத்து ஐராவதப் பாகராகி நிறை புத்தேளிர் வந்து போற்றிப்
போக தேவேந்திரன் எனப் புகழ விண்ணில் புலோமசையொடும் சுகிப்பர்
அகர முதலாகி வளர் ஆனந்த ரூபியே ஆதிகடவூரின் வாழ்வே.
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே...


7.நன்று என்று தீது என்று நவிலும் இவ்விரண்டனுள் நன்றதே உலகில் உள்ளோர்
நாடுவார் ஆதலின் நானுமே அவ்விதம் நாடினேன் நாடினாலும்
இன்று என்று சொல்லாமல் நினது திருவுள்ளமது இரங்கி அருள் செய்குவாயேல்
ஏழையேன் உய்குவேன் மெய்யான மொழி இஃது உன் இதயம் அறியாதது உண்டோ
குன்றம் எல்லாம் உறைந்து என்றும் அன்பர்க்கு அருள் குமார தேவனை அளித்த
குமரி மரகத வருணி விமலி பைரவி கருணை குலவு கிரி ராச புத்ரி
மன்றல் மிகு நந்தன வனங்கள் சிறை அளி முரல வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே...


8.மறி கடல்கள் ஏழையும் திகிரி இரு நான்கையும் மாதிரக் கரி எட்டையும்
மாநாகம் ஆனதையும் மாமேரு என்பதையும் மாகூர்மம் ஆனதையும் ஓர்
பொறி அரவு தாங்கிவரு புவனம் ஈர் ஏழையும் புத்தேளிர் கூட்டத்தையும்
பூமகளையும் திகிரி மாயவனையும் அரையில் புலி ஆடை உடையானையும்
முறை முறைகளாய் ஈன்ற முதியவளாய்ப் பழைமை முறைமை தெரியாத நின்னை
மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல் மொழிகின்றது ஏது சொல்வாய்
அறிவு நிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே...


9.ஒரு நாள் இரண்டு நாள் அல்ல நான் உலகத்து உதித்த இந்நாள் வரைக்கும்
ஒழியாத கவலையால் தீராத இன்னல் கொண்டு உள்ளம் தளர்ந்து மிகவும்
அருநாண் இயற்றிட்ட விற்போல் இருக்கும் இவ்வடிமைபால் கருணை கூர்ந்து இங்கு
அஞ்சேல் எனச் சொல்லி ஆதரிப்பவர்கள் உனை அன்றியிலை உண்மையாக
இரு நாழிகைப் போதும் வேண்டாது நிமிடத்தில் இவ்வகில புவனத்தையும்
இயற்றி அருளும் திறம் கொண்ட நீ ஏழையேன் இன்னல் தீர்த்து அருளல் அரிதோ
வரு நாவலூரர் முதலோர் பரவும் இனிய புகழ்வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே...


10.வாடாமல் உயிர் எனும் பயிர் தழைத்து ஓங்கி வர அருள்மழை பொழிந்தும் இன்ப 
வாரிதியிலே நின்னது அன்பு எனும் சிறகினால் வருந்தாமலே அணைத்துக்
கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல் குஞ்சரக் கூட்டம் முதலான சீவ
கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பினைக் குறையாமலே கொடுத்தும்
நீடாழி உலகங்கள் யாவையும் நேயமாய் நின்னுதர பந்தி பூக்கும்
நின்மலீ அகிலங்களுக்கு அன்னை என்று ஓதும் நீலி என்று ஓதுவாரோ
ஆடாய நான்மறையின் வேள்வியால் ஓங்கு புகழ் ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே...


11.எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேல் ஏறிட்டு ஒறுக்க அந்தோ
எவ்விதம் உளம் சகித்து உய்குவேன் இப்பொழுது எடுத்திட்ட சன்மம் இதனில்
நண்ணி எள் அளவு சுகம் ஆனது ஒரு நாளினும் நான் அனுபவித்தது இல்லை
நாடெலாம் அறியும் இது கேட்பது ஏன் நின்னுளமும் நன்றாய் அறிந்து இருக்கும்
புண்ணியம் பூர்வ சனனத்தினில் செய்யாத புலையன் ஆனாலும் நினது
பூரண கடாட்ச வீட்சண்ணியம் செய்து எனது புன்மையை அகற்றி அருள்வாய்
மண்ணவர்கள் விண்ணவர்கள் நித்தமும் பரவும் இசை வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே...


12.பல் குஞ்சரம் தொட்டு எறும்பு கடையானது ஒரு பல்லுயிர்க்கும் கல்லிடைப்
பட்ட தேரைக்கும் அன்று உற்பவித்திடு கருப்பை உறு சீவனுக்கும்
மல்கும் சராசரப் பொருளுக்கும் இமையாத வானவர் குழாத்தினுக்கும்
மற்றுமொரு மூவருக்கும் யாவருக்கும் அவரவர் மனச் சலிப்பு இல்லாமலே
நல்கும் தொழில் பெருமை உண்டாய் இருந்தும் மிகு நவநிதி உனக்கு இருந்தும்
நான் ஒருவன் வறுமையில் சிறியன் ஆனால் அந்நகைப்பு உனக்கே அல்லவோ
அல் கலந்து உம்பர் நாடு அளவு எடுக்கும் சோலை ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே...


13.தெரிந்தோ அலாது தெரியாமலோ இவ்வடிமை செய்திட்ட பிழை இருந்தால்
சினம் கொண்டு அது ஓர் கணக்காக வையாது நின் திருவுளம் இரங்கி மிகவும்
பரிந்து வந்து இனியேனும் பாழ் வினையில் ஆழ்ந்து இனல் படாது நல்வரம் அளித்துப்
பாதுகாத்து அருள் செய்ய வேண்டும் அண்டாண்ட உயிர் பரிவுடன் அளித்த முதல்வி
புரந்தரன் போதன் மாதவன் ஆகியோர்கள் துதி புரியும் பதாம்புய மலர்ப்
புங்கவி புராந்தகி புரந்தரி புராதனி புராணி திரி புவனேசுவரி
மருந்தினும் நயந்த சொற்பைங்கிளி வராகி எழில்வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே...


14.நீடு உலகங்களுக்கு ஆதாரமாய் நின்று நித்தமாய் முத்தி வடிவாய்
நியமமுடன் முப்பத்து இரண்டு அறம் வளர்க்கின்ற நீ மனைவியாய் இருந்தும்
வீடு வீடுகள் தோறும் ஓடிப் புகுந்து கால் வேசற்று இலச்சையும் போய்
வெண் துகில் அரைக்கு அணிய விதியற்று நிர்வாண வேடமும் கொண்டு கைக்கோர்
ஓடேந்தி நாடெங்கும் உள்ளம் தளர்ந்து நின்று உன்மத்தனாகி அம்மா
உன் கணவன் எங்கெங்கும் ஐயம் புகுந்து ஏங்கி உழல்கின்றது ஏது சொல்வாய்
ஆடு கொடி மாடமிசை மாதர் விளையாடி வரும் ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே...


15.வஞ்சகக் கொடியோர்கள் நட்பு வேண்டாமலும் மருந்தினுக்கா வேண்டினும்
மறந்தும் ஓர் பொய்ம்மொழி சொலாமலும் தீமையாம் வழியினில் செல்லாமலும்
விஞ்சு நெஞ்சு அதனில் பொறாமை தரியாமலும் வீண் வம்பு புரியாமலும்
மிக்க பெரியோர்கள் சொலும் வார்த்தை தள்ளாமலும் வெகுளியவை கொள்ளாமலும்
தஞ்சமென நினது உபய கஞ்சத் துதித்திடத் தமியேனுக்கு அருள் புரிந்து
சர்வ காலமும் எனைக் காத்து அருள வேண்டினேன் சலக் கயல்கள் விழியை அனைய
வஞ்சியர் செவ்வாய் நிகரும் வாவி ஆம்பல் மலரும் வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே...

16.ஞானம் தழைத்து உன் சொரூபத்தை அறிகின்ற நல்லோர் இடத்தினில் போய்
நடுவினில் இருந்து உவந்து அடிமையும் பூண்டு அவர் நவிற்றும் உபதேசம் உட்கொண்டு
ஈனந்தனைத் தள்ளி எனது நான் எனும் மானம் இல்லாமலே துரத்தி
இந்திரிய வாயில்களை இறுகப் புதைத்து நெஞ்சு இருளற விளக்கேற்றியே
ஆனந்தமான விழி அன்னமே உன்னை என் அகத் தாமரைப் போதிலே
வைத்து வேறே கவலை அற்று மேலுற்ற பரவசமாகி அழியாததோர்
ஆனந்த வாரிதியில் ஆழ்கின்றது என்று காண் ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே...


17.எனது இன்னல் இன்னபடி என்று வேறு ஒருவர்க்கு இசைத்திடவும் அவர்கள் கேட்டு இவ்
இன்னல் தீர்த்து உள்ளத்து இரங்கி நன்மைகள் செயவும் எள் அளவும் முடியாது நின்
உன்னதம் மருவும் கடைக் கண் அருள் சிறிது செயின் உதவாத நுண் மணல்களும்
ஓங்கு மாற்றுயர் சொர்ண மலையாகும் அதுவன்றி உயர் அகில புவனங்களைக்
கனமுடன் அளித்து முப்பத்து இரண்டு அறங்களும் கவின் பெறச் செய்யும் நின்னைக்
கருது நல் அடியவர்க்கு எளிவந்து சடுதியில் காத்து ரட்சித்தது ஓர்ந்து
வனசம் நிகர் நின்பாதம் நம்பினேன் வந்து அருள்செய் வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே...


18.சலதி உலகத்தில் சராசரங்களை ஈன்ற தாயாகினால் எனக்குத்
தாய் அல்லவோ யான் உன் மைந்தன் அன்றோ எனது சஞ்சலம் தீர்த்து நின்றன்
முலை சுரந்து ஒழுகு பாலூட்டி என் முகத்தை உன் முந்தானையால் துடைத்து
மொழிகின்ற மழலைக்கு உகந்து கொண்டு இளநிலா முறுவல் இன்புற்று அருகில் யான்
குலவி விளையாடல் கொண்டு அருள்மழை பொழிந்து அங்கை கொட்டி வா என்று அழைத்துக்
குஞ்சர முகன் கந்தனுக்கு இளையன் என்று எனைக் கூறினால் ஈனம் உண்டோ
அலை கடலிலே தோன்றும் ஆராத அமுதமே ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே...


19.கருநீல வடிவமார் மாடேறி உத்தண்ட கன தண்ட வெம் பாசமும்
கைக்கொண்டு சண்டமா காலன் முன் எதிர்க்க மார்க்கண்டன் வெகுண்டு நோக்க
இரு நீலகண்டன் எனும் நின்பதியை உள்ளத்தில் இன்பு கொண்டு அருச்சனை செய
ஈசன் அவ் இலிங்கம் பிளப்ப நின்னொடு தோன்றி யமனைச் சூலத்தில் ஊன்றிப்
பெருநீல மலையென நிலத்தில் அன்னவன் விழப் பிறங்கு தாளால் உதைத்துப்
பேசுமுனி மைந்தனுக்கு அருள் செய்தது உனதரிய பேரருளின் வண்ணம் அல்லவோ
வருநீல மடமாதர் விழியென்ன மலர் வாவி வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே...


20.கைப்போது கொண்டு உன் பதப்போது தன்னில் கணப்போதும் அர்ச்சிக்கிலேன்
கண் போதினால் உன் முகப்போது தன்னை யான் கண்டு தரிசனை புரிகிலேன்
முப்போதில் ஒரு போதும் என் மனப்போதிலே முன்னி உன் ஆலயத்தின்
முன்போதுவார் தமது பின் போத நினைகிலேன் மோசமே போய் உழன்றேன்
மைப் போதகத்திற்கு நிகரெனப் போது எருமைக் கடா மீது ஏறியே
மாகோர காலன் வரும் போது தமியேன் மனம் கலங்கித் தியங்கும்
அப்போது வந்து உன் அருட்போது தந்தருள் ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே...


21.மிகையும் துரத்த வெம் பிணியும் துரத்த வெகுளியானதும் துரத்த
மிடியும் துரத்த நரை திரையும் துரத்த மிகு வேதனைகளும் துரத்த
பகையும் துரத்த வஞ்சனையும் துரத்த பசி என்பதும் துரத்த
பாவம் துரத்த பதி மோகம் துரத்தப் பல காரியமும் துரத்த
நகையும் துரத்த ஊழ் வினையும் துரத்த என் நாளும் துரத்த வெகுவாய்
நா வறண்டு ஓடிக் கால் தளர்ந்திடும் என்னை நமனும் துரத்துவானோ
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி அபிராமியே...

22.சகல செல்வங்களும் தரும் இமய கிரிராச தனயை மாதேவி நின்னைச்
சத்யமாய் நித்யம் உள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோய் இன்மை கல்வி தன தானியம் அழகு புகழ் பெருமை இளமை
அறிவு சந்தானம் வலி துணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுக ஆனந்த வாழ்வு அளிப்பாய்
சுகிர்த குணசாலி பரிபாலி அநுகூலி திரிசூலி மங்கள விசாலி
மகவு நான் நீ தாய் அளிக்கொணாதோ மகிமை வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே...

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...