ஞாயிறு, 28 ஜனவரி, 2018

ஒன்பது கிரகங்களும் நல்லதையே செய்வதற்கான பதிகம்

திருத்தெங்கூர்

(குறிப்பு : இந்த தலத்தில் ஈசனை இலக்குமியும் நவக்கிரகங்களும் வழிபட்டனர்.
திருமகள் வந்து சிவபூஜை செய்த தலம்  மற்றும்  நவக்கிரகங்கள் இத்தலத்திற்கு வந்து தத்தம் பெயரால் ஆளுக்கொரு சிவலிங்கத்தை நிறுவி பூஜித்து பலனடைந்தார்கள்.
(திருமகளும், நவக்கிரகங்களும் பூஜித்த லிங்கங்கள் தனித்தனியாக உள்ளது. )
இந்த பதிகத்தை படிக்கும் போது நவக்ரகங்களால் நல்லதே நடக்கும்.)



இறைவன் - ரஜதகீரிஸ்வரர், வெள்ளிமலைநாதர்.


இறைவி - பிருகந்நாயகி, பெரியநாயகி. 

 திருத்தெங்கூர்

திருச்சிற்றம்பலம்

1.
புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர்; விண்ணவர் 
                                                        
போற்ற
கரை செய் மால் கடல் நஞ்சை உண்டவர்; கருதலர் 
                                                        
புரங்கள்
இரை செய்து ஆர் அழலூட்டி, உழல்பவர், இடுபலிக்கு
                                                     
எழில் சேர் 
விரை செய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று 
                                                     
அமர்ந்தாரே.
1

Top of Form
Bottom of Form
  
2.
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடுவினை 
                                                         
தீர்க்கும்,
கொத்தின் தாழ்சடை முடிமேல் கோள் எயிற்று அரவொடு 
                                                        
பிறையன்;
பத்தர் தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன்; பைம்புனல் 
                                                           
பதித்த 
வித்தன் தாழ்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று 
                                                      
அமர்ந்தாரே.
2

Top of Form
Bottom of Form
  
3.
அடையும் வல்வினை அகல அருள்பவர், அனல் உடை 
                                                       
மழுவாள
படையர், பாய் புலித்தோலர், பைம்புனக் கொன்றையர்
                                                      
படர் புன் 
சடையில் வெண்பிறை சூடித் தார் மணி அணி தரு 
                                                       
தறுகண் 
விடையர் வீங்கு எழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று 
                                                    
அமர்ந்தாரே.
3

Top of Form
Bottom of Form
  
4.
பண்டு நாம் செய்த வினைகள் பறைய, ஓர் நெறி அருள் 
                                                       
பயப்பார்;
கொண்டல் வான்மதி சூடி; குரை கடல் விடம் அணி 
                                                        
கண்டர் 
வண்டு மா மலர் ஊதி மது உண, இதழ் மறிவு எய்தி 
விண்ட வார் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று 
                                                    
அமர்ந்தாரே.
4

Top of Form
Bottom of Form
  
5.
சுழித்த வார் புனல் கங்கை சூடி, ஒர் காலனைக் காலால் 
தெழித்து, வானவர் நடுங்கச் செற்றவர்; சிறை அணி பறவை 
கழித்த வெண்தலை ஏந்தி; காமனது உடல் பொடி ஆக 
விழித்தவர் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று 
                                                      
அமர்ந்தாரே.
5

Top of Form
Bottom of Form
  
6.
தொல்லை வல்வினை தீர்ப்பார்; சுடலை வெண்பொடி 
                                                
அணி சுவண்டர்;
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர்; இமையவர் ஏத்த
சில்லை மால்விடை ஏறி, திரிபுரம் தீ எழச் செற்ற 
வில்லினார் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று 
                                                   
அமர்ந்தாரே.
6

Top of Form
Bottom of Form
  
7.
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட 
                                                       
நின்றார்;
முறி கொள் மேனி முக்கண்ணர்; முளைமதி நடு நடுத்து 
                                                       
இலங்க
பொறி கொள் வாள் அரவு அணிந்த புண்ணியர்
                                               
வெண்பொடிப்பூசி 
வெறி கொள் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று 
                                                   
அமர்ந்தாரே.
7

Top of Form
Bottom of Form
  
8.
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால்வரை எடுக்க,
கண் எலாம் பொடிந்து அலற, கால்விரல் ஊன்றிய கருத்தர்;
தண் உலாம் புனல் கன்னி தயங்கிய சடை முடிச் சதுரர் 
விண் உலாம் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று 
                                                      
அமர்ந்தாரே.
8

Top of Form
Bottom of Form
  
9.
தேடித்தான், அயன் மாலும், திருமுடி அடி இணை காணார்;
பாடத்தான் பல பூதப்படையினர்; சுடலையில் பலகால் 
ஆடத்தான் மிக வல்லர்; அருச்சுனற்கு அருள் செயக் 
                                                        
கருதும் 
வேடத்தார் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று 
                                                    
அமர்ந்தாரே.
9

Top of Form
Bottom of Form
  
10.
சடம் கொள் சீவரப்போர்வைச் சாக்கியர், சமணர், சொல் 
                                                          
தவிர
இடம் கொள் வல்வினை தீர்க்கும்; ஏத்துமின் இருமருப்பு 
                                                       
ஒருகைக் 
கடம் கொள் மால் களிற்று உரியர், கடல் கடைந்திடக் 
                                                  
கனன்று எழுந்த 
விடம் கொள் கண்டத்தர், தெங்கூர் வெள்ளி அம் குன்று 
                                                    
அமர்ந்தாரே!
10

Top of Form
Bottom of Form
  
11.
வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளி அம் குன்று 
                                                    
அமர்ந்தாரை
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
சந்தம் ஆயின பாடல் தண்தமிழ் பத்தும் வல்லார்மேல்
பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே.
11

Top of Form
Bottom of Form

  


திங்கள், 22 ஜனவரி, 2018

நல்ல நாள் கெட்ட நாள் பாராதிருக்க பாட வேண்டிய பாடல்


நமச்சிவாயபதிகம் - 2

திருபாண்டிக்கொடுமுடி 

சுந்தரர் 7ம் திருமுறை 

திருச்சிற்றம்பலம் 


1.மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே.


2.இட்ட னுன்னடி ஏத்து வார்இகழ்ந் திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாள்இவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே.


3.ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர் போகும் நாள்உயர் பாடைமேல்
காவு நாள்இவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே.


4.எல்லை யில்புகழ் எம்பிரான் எந்தை தம்பி ரான்என்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே.


5.அஞ்சி னார்க்கர ணாதி என்றடி யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள் நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே.

6.ஏடு வான்இளந் திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்ப தரைக்க சைத்த அழக னேஅந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடிச்
சேட னேஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே.


7.விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந் தேன்வி னைகளும் விண்டன
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே.


8.செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந் தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாக மமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே.


9.சாரணன்தந்தை எம்பி ரான்எந்தை தம்பி ரான்எம்பொன் மாமணீயென்று
பேரெணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
நாரணன்பிர மன்தொ ழுங்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
காரணாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே.

10.கோணி யபிறை சூடி யைக்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப் பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத் தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை சொல்லு வார்க்கில்லை துன்பமே.

திருச்சிற்றம்பலம் 

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...