உ
"தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
சமயக் குறவர்கள்
"நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே".
நால்வர் தேவாரம்
- திருஞானசம்பந்தர்
- திருநாவுக்கரசர்
- சுந்தரமூர்த்தி
- மாணிக்கவாசகர்
திருசிற்றம்பலம்
தேவாரம் தே+வாரம்
தே - தெய்வம்
வாரம் - சொல் ஒழுக்கம் இசை ஒழுக்கம்
- இசைத தமிழால் ஈசனை பாடி மகிழ்வது உயிருக்கு இன்றியமையாதது என்பது ஆன்றோர் வாக்கு.
இறை வழிபாட்டிற்கு தேவாரம்
அத்தியாவசியமாகிறது.தேவாரம் இன்றி செய்யும் வழிபாடு வழிபாடகாது என்பதை நம் உணர வேண்டும்.
- அரவம் தீண்டி இறந்த பாலகனை எழுப்பியதும்,
- எலும்பினைப் பெண்ணாக்கியதும்,
- அசைவின்றிக் நிலைப்படுத்தப்பட்ட கதவுகளை திறந்ததும், மூடியதும்,
- கல்லைத் தெப்பமாக்கியும்,
- முதலையுண்ட பாலகனை உயிர்ப்பித்ததும்,
- ஊமைப் பெண்ணை பேச வைத்ததும்,
- நிலைத்த தேரினை ஓடச் செய்ததும்,
- வேண்டிய அளவு பொன்னும் மணியும் துகிலும் நெல்லும் அளித்ததும்,
- இறைவனே மாணிக்கவாசகர் சொல்ல சொல்ல திரு ஏட்டில் திருவாசகம் எழுதியது.....இன்னும் பற்பல ........
இது மட்டுமல்லாமல் பல பல அற்புதங்களை புரிந்ததும் இத் தேவாரப் பாடல்கலன்றி வேறொன்றில்லை. மூவர் பெருமக்கள் அருளிய தேவாரப் பாடல்கள் 8256. இதனை அடங்கள் என்று அழைப்பார்கள். இதனை தினசரி பாடிவந்தால் முக்தி கிடைப்பது எளிது.
அன்பர்கள் நாளும் தேவாரம்,திருவாசகம் படித்து இம்மையில் துன்பம் நீக்கி வீடு பேறு பெற்று முக்தியடைய எல்லாம் வல்ல எம் இறைவன் சிவபெருமானாரை பிரார்த்தித்து, இந்த வலை தலத்தில் அடியேன் எனக்கு தெறிந்த தேவார,திருவாசக பாடல்களை பலன்களு டன் வெளியிட விரும்புகிறேன்.....
இறையன்பர்கள் நாளும் ஓதி பயனடைவோர்மாக !!!!!!!!!!!
இந்த வலை தளம் முழுமையும் என் அப்பன் ஈசன் சொக்கநாத பெருமானுக்கும் மீனாக்ஷி அம்பாள் க்கும் சமர்பிக்கிறேன்...
(குறிப்பு : ஏதேனும் சொல் பிழை பொருள் பிழை இருந்தால் அடியேனை மன்னிக்கவும்..)
திருச்சிற்றம்பலம் . சிவ.பாகம்பிரியாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக