செவ்வாய், 12 ஜூலை, 2011

சிவராத்திரி விரதத்தின் மகிமை பற்றிய சிறிய கதை

சிவராத்திரி  விரதத்தின்  மகிமை
ஒரு ஊரில் ஒரு அரசன் வாழ்ந்து வந்தான்..அவனுக்கு ஒரு மந்திரி இருந்தான்.   அரசவையில் மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தான்..
அந்த மந்திரி க்கு  இரு மகன்கள்..
ஒருவன்  பெயர் பாலன் ..
மற்றவன் பெயர் வேத நெறி - இருவரும்  மந்திரியின் சொல் பேச்சை கேட்காமல் தன்னுடைய இஷ்டம் போல வாழ்பவர்கள் ..
அதனால் வயது வந்த  பின் தனது சொத்தை உடனடியாக பிரித்து தரும்படி கேட்டுச்சென்றனர்..
அரசனுக்கு மந்திரி  மீது மிகவும் பிரியம்..அவர் அறிவுத் திறமை குறித்து நன்கு அவரிடம் அன்பும் பண்பும் நிறைந்ததாக இருப்பார்..  ஒருநாள் அரசவையில் மந்திரியின் பெருமை கண்டு மாதிரிக்கு அரசன் ஒரு நவரத்தினங்களால் செய்யப்பட்ட அழகிய மோதிரத்தை பரிசாக கொடுத்தான்..  அன்று மந்திரி அந்த மோதிரத்தை வீட்டிற்கு எடுத்து சென்று பத்திரமாக வைத்து கொள் என்று தனது மனைவியிடம் ஆணையிட்டார்..ஒரு நாள் இதை அறிந்து தனது வீட்டிற்கு வந்த வேதநெறி என்ற இரண்டாமவன் வீட்டில் யாருக்கும் தெரியாமல் அந்த மோதிரத்தை எடுத்து திருடி ஒரு அழகான நாட்டிய பெண்ணுக்கு பரிசளித்தான்,,
மறு நாள் அந்த பெண் அரசவையில் அரசன் முன் நடனம் ஆடிகொண்டிருக்கும் வேளையில் அவளது கையில் இருந்த மோதிரத்தை பார்த்து அரசனுக்கு மிகவும் அதிர்ச்சி.. நாம் மந்திரிக்கு கொடுத்த மோதிரமாச்சே!! இது எப்படி இந்த பெண்ணின் கையில் என்று யோசித்தவாறு மந்திரியை அழைத்து உங்களிடம் தந்த அந்த நவரத்தினம் பதித்த மோதிரத்தை எடுத்து வாருங்கள் என்று ஆணை இட்டான்..  மந்திரியும் வீட்டிற்கு சென்று பார்க்கிறார்..மோதிரம் காணவில்லை..  வுடனே மந்திரி இல்லை என்ற விபரத்தை கூறியவுடன் அரசன் அந்த பெண்ணிடம் யார் உனக்கு மோதிரத்தை கொடுத்தார்கள் என்று கேட்டவுடன்,அவளும் வேதநெறி எண்டு மந்திரி மகனை சொல்ல அங்கிருந்த மந்திரி தான் மகன் செய்த காரியத்தை நினைத்து மிகவும் வேதனை அடைந்து சில காவலாளிகளை கூட்டிட்டு மகனை கொல்ல போகிறேன் என்று செல்கிறார்..  மகன் வேதநெறியும்  விஷயம் அறிந்து வேகமாக  ஓடுகிறான்..
அன்று காலை ஆரம்பித்தது ஓட்டம்.  முடியவில்லை..
அன்று சிவராத்திரி தினம். அவன்  காலையில்  இருந்து பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் காவலாளிகளுக்கு  பயந்து விட்டு ஓடி கிட்டே இருக்கின்றான்..  இறுதியில் ஒரு சிவாலயம் வருகிறது.. அங்கு எம்பெருமானார் சிவனுக்கு சில நெய்வைத்தியங்கள் பக்தர்கள் படைத்தது இருந்தனர்.. அவன் ஓட்டம் தாங்காமல் ஈசன் கருவறைக்குள் செல்கிறான்..ஒரு சிறிய விளக்கு மட்டும் அணைந்து போகின்ற நிலைமையில் உள்ளது..அவன் தான் வயிற்று பசி தாங்காமல் அந்த இறைவனின் அறைக்குள் ஏதேனும் நெய்வைத்தியம் உண்பதற்காக அந்த விளக்கை தூண்டினான்..தூண்டிய உடன் கோவிலில் இருந்து சிலர் அவனை அடிக்கலானர்.
அவன் சப்தம் கேட்டவுடன் எந்த பிரசாதத்தையும் சாப்பிடாமல் ஓடத்துவங்கினான்.. இறுதியில் பசி தாங்கமுடியாமல் இறந்து போனான்..
உடனே அவன் இறந்த உடன் எம தூதர்கள்
அவனை கூட்டிச்செல்ல ஒருபுறம் வருகின்றனர்., மறுபுறம் கைலாயத்தில் இருந்து எம்பெருமானாரால் தேவர்கள் அழைத்துச்செல்ல வருகின்றனர்.. எமதூதர்கள் சரியாக அவனை தொடும் வேளையில்,தேவர்கள் அந்த வேத நெறியை விட்டு விடுங்கள்..அவன் கைலாயத்தில் சிவபெருமனரால் அழைக்கப் பட்டிருக்கின்றான் என்ற வுடன் எமதூதர்கள் என் எதற்கு என்று வினவினார்கள்..
அதற்கு தேவர்கள் கூறிய பதில் 

அவன் இறந்த நாள் முதலில் சிவராத்திரி 
அவன் அன்று பச்சை தண்ணீர் கூட குடிக்க வில்லை..
அவன் ஈசனின் கருவறைக்குள் அணையும் நிலையில் இருந்த விளக்கை தூண்டினான்,,

என்று கூறியவுடன் எமதூதர்கள் தேவர்களிடமே அவனை விட்டுவிட்டனர்.. 
அவனும் கைலாயமலையில் ஈசனின் முக்தி பேற்றிற்கு ஆளானான்.

தெரியாமல் நடந்தது அந்த வேதநெறியின் செயல்கள்,,
அதற்கே அவனுக்கு முக்தி கிடைத்தது என்றால்,நாம் தினமும் கடவுளை மனதை ஒருமுக படுத்தி இறைவனை வழிபட்டால் எந்த அளவு இறைவனிடம் பேரருள் பெற்று முக்திநிலையை அடையலாம்..

2 கருத்துகள்:

  1. அருமையான பகிர்வு..

    வாழ்த்துக்கள்..

    இறைவன் நம்மீது எவ்வளவு கருணை காட்டுகிறான் ?
    ஆனால் இது போன்ற சிறிய புண்ணியங்களைக் கூட செய்யாமல் வாழ்பவர்களைப் பற்றி என்ன சொல்வது ?

    இறை நம்பிக்கையை வளர்க்கும் அருமையான கதை..

    தொடரட்டும் தங்கள் புனிதப் பயணம்

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    பதிலளிநீக்கு

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...