செய்யும் தொழிலில் மேன்மை பெறவும், தொழில் நிரந்தரம் பெறவும் பாட வேண்டிய பதிகம்
திருமயிலாப்பூர் - பூம்பாவைத் திருப்பதிகம் - சீகாமரம்
திருஞானசம்பந்தர்
மட்டு இட்ட புன்னை அம்கானல் மடமயிலைக் கட்டு இட்டம் கொண்டான், கபாலீச்சுரம் அமர்ந்தான், ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு அட்டு இட்டல் காணாதே போதியோ? பூம்பாவாய்! | 1 |
மைப் பயந்த ஒண்கண் மடநல்லார் மா மயிலைக் கைப் பயந்த நீற்றான், கபாலீச்சுரம் அமர்ந்தான், ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும் காணாதே போதியோ? பூம்பாவாய்! | 2 |
வளைக்கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில் துளக்கு இல் கபாலீச்சுரத்தான் தொல்கார்த்திகைநாள் தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ? பூம்பாவாய்! | 3 |
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலைக் கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில், கார் தரு சோலைக் கபாலீச்சுரம் அமர்ந்தான் ஆர்திரைநாள் காணாதே போதியோ? பூம்பாவாய்! | 4 |
மைப் பூசும் ஒண்கண் மடநல்லார் மா மயிலைக் கைப் பூசு நீற்றான், கபாலீச்சுரம் அமர்ந்தான் நெய்ப் பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசும் காணாதே போதியோ? பூம்பாவாய்! | 5 |
மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடல் ஆட்டுக் கண்டான், கபாலீச்சுரம் அமர்ந்தான், அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள், அடி பரவி, நடம் ஆடல் காணாதே போதியோ? பூம்பாவாய்! | 6 |
மலி விழா வீதி மடநல்லார் மா மயிலைக் கலி விழாக் கண்டான், கபாலீச்சுரம் அமர்ந்தான் பலி விழாப் பாடல்செய் பங்குனி உத்தரநாள் ஒலி விழாக் காணாதே போதியோ? பூம்பாவாய்! | 7 |
தண் ஆர் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான், கண் ஆர் மயிலைக் கபாலீச்சுரம் அமர்ந்தான், பண் ஆர் பதினெண்கணங்கள் தம்(ம்) அட்டமி நாள் கண் ஆரக் காணாதே போதியோ? பூம்பாவாய்! | 8 |
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும் முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி, திருவடியைக் கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம் அமர்ந்தான், பொன் தாப்புக் காணாதே போதியோ? பூம்பாவாய்! | 9 |
உரிஞ்சு ஆய வாழ்க்கை அமண், உடையைப் போர்க்கும் இருஞ் சாக்கியர்கள், எடுத்து உரைப்ப, நாட்டில் கருஞ் சோலை சூழ்ந்த கபாலீச்சுரம் அமர்ந்தான் பெருஞ் சாந்தி காணாதே போதியோ? பூம்பாவாய்! | 10 |
கான் அமர் சோலைக் கபாலீச்சுரம் அமர்ந்தான் தேன் அமர் பூம்பாவைப் பாட்டு ஆகச் செந்தமிழான் ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார், வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே. | 11 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக