வியாழன், 20 ஜூன், 2019

எடுத்த காரியம் தடையின்றி இனிதே நடை பெறவும், கடன் தொல்லை அகன்று போதிய வருமானம் பெறவும் பாட வேண்டிய பதிகம்

எடுத்த காரியம் தடையின்றி இனிதே நடை பெறவும், கடன் தொல்லை அகன்று போதிய வருமானம் பெறவும் பாட வேண்டிய பதிகம் 

திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் 

 திருஆலவாய் - நாலடிமேல் வைப்பு - பழம்பஞ்சுரம் 

திருச்சிற்றம்பலம் 

1.வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதம் இ(ல்)லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?
பாதி மாது உடன் ஆய பரமனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!      

2.வைதிகத்தின் வழி ஒழுகாத அக்
கைதவம்(ம்) உடைக் கார் அமண் தேரரை
எய்தி, வாதுசெயத் திரு உள்ளமே?
மை திகழ்தரு மா மணிகண்டனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!      
 
3.மறை வழக்கம் இலாத மா பாவிகள்
பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களை
முறிய, வாதுசெயத் திரு உள்ளமே?
மறி உலாம் கையில் மா மழுவாளனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!      
 
4.அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையைக்
கறுத்து வாழ் அமண்கையர்கள் தம்மொடும்
செறுத்து, வாதுசெயத் திரு உள்ளமே?
முறித்த வாள் மதிக்கண்ணி முதல்வனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!      

5.அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த, வாதுசெயத் திரு உள்ளமே?
வெந்த நீறு அது அணியும் விகிர்தனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!      
 
6.வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
மூட்டு சிந்தை முருட்டு அமண்குண்டரை
ஓட்டி, வாதுசெயத் திரு உள்ளமே?
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!      
 
7.அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம்
விழல் அது என்னும் அருகர் திறத்திறம்
கழல், வாதுசெயத் திரு உள்ளமே?
தழல் இலங்கு திரு உருச் சைவனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!      
 
8.நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி, வாதுசெயத் திரு உள்ளமே?
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!      
 
9.நீல மேனி அமணர் திறத்து நின்
சீலம் வாது செயத் திரு உள்ளமே?
மாலும் நான்முகனும் காண்பு அரியது ஓர்
கோலம் மேனி அது ஆகிய குன்றமே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!      
 
10.அன்று முப்புரம் செற்ற அழக! நின்
துன்று பொன்கழல் பேணா அருகரைத்
தென்ற வாதுசெயத் திரு உள்ளமே?
கன்று சாக்கியர் காணாத் தலைவனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!      
 
11.கூடல் ஆலவாய்க்கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட,
மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப்
பாடல் வல்லவர் பாக்கியவாளரே.   

திருச்சிற்றம்பலம்    

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...