சோம்பல் நீக்கி சுறுசுறுப்பு பெறவும்,எதிரிகள் என்பதே இல்லாத வாழ்வு பெறவும், பாட வேண்டிய அப்பர் பதிகம்
குறிப்பு :( இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவில் இறைவனைப் பூசித்த தலம்.
எறும்புகள் பூஜித்த இத்தல சுவாமியை வழிபடுபவர்கள், சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு பெறுவார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
தேவர்களின் தலைவனான இந்திரனையும், மற்ற தேவர்களையும் தாரகாசுரன் என்ற அசுரன் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் அனைவரும் இதுபற்றி பிரம்மதேவரிடம் சென்று முறையிட்டனர். பிரம்மாவோ, மண்ணுலகில் இத்தலத்தின் மலை மீது இருக்கும் சிவனை பூக்கொண்டு அர்ச்சித்து வழிபட்டால், அசுரனின் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்று துன்பத்தில் இருந்து தப்பிக்கும் வழியைக் கூறினார்.
இதையடுத்து தேவர்கள் அனைவரும் அசுரனுக்கு பயந்து, சிறிய உருவான எறும்பாக வடிவெடுத்து இத்தலத்திற்கு வந்தனர். மேலும் எறும்பு வடிவத்திலேயே, சிவனது சிரம் மீது ஏறி பூக்களைக் கொண்டு அர்ச்சித்து வழிபட்டனர். எறும்பு வடிவில் இருந்த தேவர்களுக்கு அருள்செய்ய நினைத்த சிவபெருமான், எறும்புகள் ஏறுவதற்கு வசதியாக வழுவழுப்பான தனது லிங்க உருவத்தை சொரசொரப்பாக மாற்றிக்கொண்டாராம்.
எறும்புகளின் வழிபாட்டில் மகிழ்வுற்ற எம்பெருமான் அசுரனை அழித்து, தேவர்களுக்கு வாழ்வு கொடுத்தார். எறும்புகள் வழிபட்டதன் காரணமாக இத்தல இறைவனுக்கு ‘எறும்பீசர்’ என்று பெயர் வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இன்றும் சிவ பூஜை நடக்கும் நேரத்தில் கருவறையில் எறும்புகள் ஊர்ந்து செல்லுவதைக் காணலாம். தேவர்கள் வந்து தினமும் எறும்பு வடிவில் இத்தல இறைவனை வழிபடுவதாக நம்பப்படுகிறது.ஆகையினால் எதிரிகளும் அடங்கி போவார்கள்.)
திருநாவுக்கரசர் அருளிய பதிகம்
திருஎறும்பியூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
1.விரும்பி ஊறு விடேல், மட நெஞ்சமே!
கரும்பின் ஊறல் கண்டாய், கலந்தார்க்கு அவன்;-
இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண்தலை
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
2.பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன்; பேணு சீர்க்
கறங்கு பூதகணம் உடைக் கண்ணுதல்-
நறுங்குழல் மடவாளொடு நாள்தொறும்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
3.மருந்து, வானவர் தானவர்க்கு இன்சுவை;
புரிந்த புன்சடைப் புண்ணியன், கண்ணுதல்-
பொருந்து பூண் முலை மங்கை நல்லாளொடும்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
4.நிறம் கொள் கண்டத்து நின்மலன்; எம் இறை;
மறம் கொள் வேல்கண்ணி வாணுதல் பாகமா,
அறம் புரிந்து அருள்செய்த எம் அம்கணன்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
5.நறும் பொன்நாள் மலர்க் கொன்றையும் நாகமும்
துறும்பு செஞ்சடை, தூ மதி வைத்து, வான்
உறும் பொன்மால்வரைப் பேதையோடு ஊர்தொறும்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
6.கறும்பி ஊர்வன ஐந்து உள, காயத்தில்;
திறம்பி ஊர்வன மற்றும் பல உள;
குறும்பி ஊர்வது ஓர் கூட்டு அகத்து இட்டு, எனை
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே!
7.மறந்தும், மற்று இது பேர் இடர்; நாள்தொறும்
திறம்பி, நீ நினையேல், மட நெஞ்சமே!
புறம் செய் கோலக் குரம்பையில் இட்டு, எனை
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே!
8.இன்பமும், பிறப்பும்(ம்), இறப்பி(ன்)னொடு,
துன்பமும்(ம்) உடனே வைத்த சோதியான்
அன்பனே, அரனே! என்று அரற்றுவார்க்கு
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே.
9.கண் நிறைந்த கன பவளத்திரள்;
விண் நிறைந்த விரி சுடர்ச் சோதியான்;
உள்-நிறைந்து, உருஆய், உயிர் ஆயவன்
எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே.
10.நிறம் கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும்,
நறுங்குழல் மடவாள் நடுக்கு எய்திட,
மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான்
எறும்பியூர் மலை எம் இறை; காண்மினே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக