மனக்கவலை அடியோடு அகல பாட வேண்டிய திருப்புகழ்
அருணகிரிநாதர் அருளிய சிதம்பரம் திருப்புகழ்
நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
நாயே னரற்றுமொழி ...... வினையாயின்
நாதா திருச்சபையி னேறாது சித்தமென
நாலா வகைக்குமுன ...... தருள்பேசி
வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
வாய்பாறி நிற்குமெனை ...... அருள்கூர
வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
வாரே னெனக்கெதிர் முன் ...... வரவேணும்
சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி
தோலா சனத்தியுமை ...... யருள்பாலா
தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த
தோழா கடப்பமல ...... ரணிவோனே
ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு
மேராள் குறத்திதிரு ...... மணவாளா
ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை
ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே.
"வேலும் மயிலும் சேவலும் துணை"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக