கந்தர் அலங்காரத்தில் சில முக்கிய தினசரி பராயணப்பாடல்கள்
அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரத்தில் சில பாடல்கள் (பராயணத்திற்குரியது)
குறிப்பு :(அடியவர்கள் தினமும் இந்த குறிப்பிட்ட பாடலை பாராயணம் செய்தால் முருகன் அருள் முன் நிற்கும்)
நம் தலைஎழுத்தை மாற்றி அமைக்க
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.
மயிலின் ஆற்றல்
குசை நெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர் குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின் கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு அடியில் எண்-
திசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டது.
எம பயம் அற
ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து எனக்குக்
காலையும் மாலையும் முன்னிற்குமே கந்தவேள் மருங்கில்
சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்த செச்சை
மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே.
பிறவிப்பெருங்கடலை கடக்க
முடியாப் பிறவிக் கடலில் புகார், முழுதும் கெடுக்கும்
மிடியால் படியில் விதனப்படார், வெற்றிவேல் பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப்
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே.
முருகனே துணை
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.
முருகனை மறவாதவர்களுக்கு எந்த குறையும் வராது
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
மயிலின் ஆற்றல்
தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில் நீ
வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே.
மேற்சொன்னவைகளில் ஏதேனும் ஒன்று படித்தால் அதற்குரிய பலன் இந்த இறுதி பாடல்
நூற்பயன்
சலங்காணும் வேந்தர்தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்
அலங்கார நூற்று ளொருகவிதான்கற் றறிந்தவரே.
விளக்கம் :
(சினம் கொள்கின்ற அரசர்களுக்கும் அஞ்சமாட்டார்கள்; இயமனுடைய
போருக்கும் அஞ்சமாட்டார்கள்; இருண்ட நரகக் குழியை அடைய
மாட்டார்கள்; கொடிய நோய்களால் துன்புறமாட்டார்கள்; புலி கரடி யானை
முதலிய கொடிய விலங்குகள் குறித்தும் மனம் கலங்க மாட்டார்கள்;
கந்தப்பெருமானது பெருமையைக் கூறும் நல்ல நூலாகிய
கந்தரலங்காரத்தின் நூறு திருப்பாடல்களுள் ஒரு திருப்பாடலையேனும்
கற்று அதன் மெய்ப்பொருளை உணர்ந்தவர்களே அவர்களாவர். )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக