புதன், 24 ஏப்ரல், 2019

வேலை ஆட்களால் லாபம் பெற,நவக்ரஹ தோஷம் நீங்க, சுபிட்சங்கள் பல பெற பாட வேண்டிய பதிகம்

வேலை  ஆட்களால் லாபம் பெற,நவக்ரஹ தோஷம் நீங்க, சுபிட்சங்கள் பல பெற பாட வேண்டிய  பதிகம் 

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் அருளிய 7 ம் திருமுறை 

திருக்கோளிலி 

திருச்சிற்றம்பலம் 

1.நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கை தொழுவேன்; 
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே, 
கோளிலி எம்பெருமான்! குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; 
ஆள் இலை; எம்பெருமான், அவை அட்டித்தரப் பணியே! .
 
2.வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர் பங்கு உடையாய்! 
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்த எம் வேதியனே! 
தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! 
அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! .
 
3.பாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும் சடைக் கங்கை வைத்தாய்; 
மாதர் நல்லார் வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே! 
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; 
ஆதியே, அற்புதனே, அவை அட்டித்தரப் பணியே! .

4.சொல்லுவது என், உனை நான்? தொண்டை வாய் உமை நங்கையை நீ 
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ? 
கொல்லை வளம் புறவில்-குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .
 
5.முல்லை முறுவல் உமை ஒரு பங்கு உடை முக்கணனே! 
பல் அயர் வெண்தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா! 
கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி எம்பெருமான்! 
அல்லல் களைந்து, அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .
 
6.குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர் பங்கு உடையாய்! 
பரவை பசி வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே! 
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; 
அரவம் அசைத்தவனே, அவை அட்டித்தரப் பணியே! .

7.எம்பெருமான்! நுனையே நினைந்து ஏத்துவன், எப்பொழுதும்; 
வம்பு அமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே! 
செம்பொனின் மாளிகை சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! 
அன்பு அது(வ்) ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .
 
8.அரக்கன் முடி கரங்கள்(ள்) அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்! 
பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள்; 
குரக்கு இனங்கள் குதி கொள் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; 
இரக்கம் அது ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .

9.பண்டைய மால், பிரமன், பறந்தும்(ம்) இடந்தும்(ம்) அயர்ந்தும் 
கண்டிலராய், அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான்! 
தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! 
அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! .
 
10.கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி மேயவனை 
நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன் 
நெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏத்திய பத்தும் வல்லார், 
அல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான் உலகு ஆள்பவரே .

திருச்சிற்றம்பலம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...