புதன், 11 செப்டம்பர், 2019

தீராத நோய்கள் (உடல் நோய்,மன நோய்) அனைத்தும் தீர பாட வேண்டிய திருப்புகழ்

தீராத நோய்கள்  (உடல் நோய்,மன நோய்) அனைத்தும் தீர பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருவருணை திருப்புகழ் 

திருவண்ணாமலை 

இருவர் மயலோ அமளி விதமோ
     எனென செயலோ ...... அணுகாத

இருடி அயன்மா லமர ரடியா
     ரிசையு மொலிதா ...... னிவைகேளா

தொருவ னடியே னலறு மொழிதா
     னொருவர் பரிவாய் ...... மொழிவாரோ

உனது பததூள் புவன கிரிதா
     னுனது கிருபா ...... கரமேதோ

பரம குருவா யணுவி லசைவாய்
     பவன முதலா ...... கியபூதப்

படையு முடையாய் சகல வடிவாய்
     பழைய வடிவா ...... கியவேலா

அரியு மயனோ டபய மெனவே
     அயிலை யிருள்மேல் ...... விடுவோனே

அடிமை கொடுநோய் பொடிகள் படவே
     அருண கிரிவாழ் ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...