திங்கள், 9 செப்டம்பர், 2019

தீயவை நீக்கும் திருப்புகழ்

தீயவை நீக்கும் திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய சிறுவாபுரி திருப்புகழ் 



(குறிப்பு : நம் இடர் களைந்து தீயவனவற்றை அடியோடு அழிக்கும் அற்புத திருப்புகழ்)

வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள்
     காத லின்பொருள் மேவின பாதகர்
          வீணில் விண்டுள நாடிய ரூமைகள் ...... விலைகூறி

வேளை யென்பதி லாவசை பேசியர்
     வேசி யென்பவ ராமிசை மோகிகள்
          மீது நெஞ்சழி யாசையி லேயுழல் ...... சிறியேனும்

மால யன்பர னாரிமை யோர்முனி
     வோர் புரந்தர னாதிய ரேதொழ
          மாத வம்பெறு தாளிணை யேதின ...... மறவாதே

வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி
     யேவி ரும்பி வினாவுட னேதொழ
          வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர் ...... களைவாயே

நீல சுந்தரி கோமளி யாமளி
     நாட கம்பயில் நாரணி பூரணி
          நீடு பஞ்சவி சூலினி மாலினி ...... யுமைகாளி

நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ
     காம சுந்தரி யேதரு பாலக
          நீர்பொ ருஞ்சடை யாரருள் தேசிக ...... முருகேச

ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற
     மாநி லங்களெ லாநிலை யேதரு
          ஆய னந்திரு வூரக மால்திரு ...... மருகோனே

ஆட கம்பயில் கோபுர மாமதி
     லால யம்பல வீதியு மேநிறை
          வான தென்சிறு வாபுரி மேவிய ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...