செவ்வாய், 3 செப்டம்பர், 2019

கோபம் அகல பாட வேண்டிய திருப்புகழ்

கோபம் அகல பாட  வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய விராலிமலை திருப்புகழ் 

மாலாசை கோப மோயாதெ நாளு
     மாயா விகார ...... வழியேசெல்

மாபாவி காளி தானேனு நாத
     மாதா பிதாவு ...... மினிநீயே

நாலான வேத நூலாக மாதி
     நானோதி னேனு ...... மிலைவீணே

நாள்போய் விடாம லாறாறு மீதில்
     ஞானோப தேச ...... மருள்வாயே

பாலா கலார ஆமோத லேப
     பாடீர வாக ...... அணிமீதே

பாதாள பூமி யாதார மீன
     பானீய மேலை ...... வயலூரா

வேலா விராலி வாழ்வே சமூக
     வேதாள பூத ...... பதிசேயே

வீரா கடோர சூராரி யேசெ
     வேளே சுரேசர் ...... பெருமாளே.


"வேலும்  மயிலும் சேவலும் துணை"



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...