செவ்வாய், 3 செப்டம்பர், 2019

அடியவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற பாட வேண்டிய திருப்புகழ்

அடியவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருவக்கரை திருப்புகழ் 

கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
     தொழிவ துனைச்சிறி ...... துரையாதே

கருவழிதத்திய மடுவ தனிற்புகு
     கடுநர குக்கிடை ...... யிடைவீழா

உலகு தனிற்பல பிறவி தரித்தற
     வுழல்வது விட்டினி ...... யடிநாயேன்

உனதடி மைத்திரள் அதனினு முட்பட
     வுபய மலர்ப்பத ...... மருள்வாயே

குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
     நிசிசர னைப்பொரு ...... மயில்வீரா

குணதர வித்தக குமர புனத்திடை
     குறமக ளைப்புணர் ...... மணிமார்பா

அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
     மணிதிரு வக்கரை ...... யுறைவோனே

அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
     அவைதரு வித்தருள் ...... பெருமாளே.


"வேலும் மயிலும் சேவலும் துணை"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...