பகை தீர பாட வேண்டிய திருப்புகழ்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
சோமநாதன்மடம்
"வேலும் மயிலும் சேவலும் துணை"
ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு
முழலுமநு ராக மோக ...... அநுபோகம்
உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத
வுளமுநெகிழ் வாகு மாறு ...... அடியேனுக்
கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர
மெனமொழியும் வீசு பாச ...... கனகோப
எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை
யெனதுபகை தீர நீயும் ...... அருள்வாயே
அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை
அடைவுதவ றாது பேணும் ...... அறிவாளன்
அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன்
அவனிபுகழ் சோமநாதன் ...... மடமேவும்
முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ
முகரசல ராசி வேக ...... முனிவோனே
மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு
முனியஅறி யாத தேவர் ...... பெருமாளே.
"வேலும் மயிலும் சேவலும் துணை"
குறிப்பு : இப்பாடலில் நடு வரிகளில் (எம படரை = எம தூதர்களை மோதும் = மோதி வெருட்டத் தக்க மோன உரையில் = மௌன நிலையை உபதேச வாளை = உபதேசம் என்கின்ற வாளை எனது பகை தீர = எனது உட்பகை, புறப்பகை யாவும் ஒழிந்து போக நீயும் அருள்வாயே = தயை கூர்ந்து அருள் புரிய வேண்டும்) இவ்வாறு இருப்பதை நாம் அறியலாம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக