திங்கள், 3 ஜூலை, 2023

பேச இயலாதவர்கள் நன்கு பேசவும், திக்கு வாய் உள்ளவர்கள் நன்றாக பேசவும் பாட வேண்டிய பதிகம்!!!

 பேச இயலாதவர்கள் நன்கு பேசவும், திக்கு வாய் உள்ளவர்கள் நன்றாக பேசவும் பாட வேண்டிய பதிகம்!!!

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 3- ம் திருமுறை 

திருப்பெருவேளூர் - பஞ்சமம்


இறைவன் :  பிரியாநாதர் 

இறைவி : பாகம்பிரியாள் 


                             திருச்சிற்றம்பலம் 

1. அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார்

விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள் செய்வார்

கண் ஆவார், உலகுக்குக் கருத்து ஆனார், புரம் எரித்த

பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.   1

 

2. கருமானின் உரி உடையர், கரிகாடர், இமவானார்

மருமானார், இவர் என்றும் மடவாளோடு உடன் ஆவர்,

பொரு மான விடை ஊர்வது உடையார், வெண்பொடிப் பூசும்

பெருமானார், பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே.      2

 

3. குணக்கும் தென் திசைக்கண்ணும் குடபாலும் வடபாலும்

கணக்கு என்ன அருள் செய்வார், கழிந்தோர்க்கும்

                                            ஒழிந்தோர்க்கும்;

வணக்கம் செய் மனத்தாராய் வணங்காதார் தமக்கு என்றும்

பிணக்கம் செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.      3

 

4. இறைக் கண்ட வளையாளோடு இரு கூறு ஆய் ஒருகூறு

மறைக் கண்டத்து இறை நாவர், மதில் எய்த சிலை வலவர்,

கறைக் கொண்ட மிடறு உடையர், கனல் கிளரும் சடைமுடிமேல்

பிறைக் கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே.      4

 

5. விழையாதார், விழைவார் போல் விகிர்தங்கள் பல பேசி;

குழையாதார், குழைவார் போல் குணம் நல்ல பல கூறி;

அழையாவும் அரற்றாவும் அடி வீழ்வார் தமக்கு என்றும்

பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.      5

 

6. விரித்தார், நால்மறைப் பொருளை; உமை அஞ்ச, விறல் வேழம்

உரித்தார், ஆம் உரி போர்த்து; மதில் மூன்றும் ஒரு

                                               கணையால்

எரித்தார் ஆம், இமைப்பு அளவில்; இமையோர்கள் தொழுது

                                                             இறைஞ்சப்

பெருத்தார்; எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே.      6

 

7. மறப்பு இலா அடிமைக்கண் மனம் வைப்பார்; தமக்கு எல்லாம்

சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார், ஒரு கணையால்;

இறப்பு இலார்; பிணி இல்லார்; தமக்கு என்றும் கேடு இலார்

பிறப்பு இலாப் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.      7

 

8. எரி ஆர் வேல் கடல்-தானை இலங்கைக் கோன்தனை வீழ,

முரி ஆர்ந்த தடந்தோள்கள் அடர்த்து, உகந்த முதலாளா

வரி ஆர் வெஞ்சிலை பிடித்து, மடவாளை ஒரு பாகம்

பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.     8

 

9. சேண் இயலும் நெடுமாலும் திசைமுகனும் செரு எய்தி,

காண் இயல்பை அறிவு இலராய், கனல் வண்ணர் அடி

                                                      இணைக்கீழ்

நாணி அவர் தொழுது ஏத்த, நாணாமே அருள் செய்து

பேணிய எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே.      9

 

10. புற்று ஏறி உணங்குவார், புகை ஆர்ந்த துகில் போர்ப்பார்

சொல்-தேற வேண்டா, நீர்! தொழுமின்கள், சுடர் வண்ணம்!

மல்-தேரும் பரிமாவும் மதகளிரும் இவை ஒழிய,

பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.      10

 

11. பைம் பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி,

அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர்

நம்பன் தன் கழல் பரவி, நவில்கின்ற மறை ஞான-

சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு, அருவினை நோய் சாராவே.  11


                                 திருச்சிற்றம்பலம் 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...