நாம் செல்லும் இடங்களெல்லாம் கந்தா!!! என்று அலைக்கும் போது செஞ்சேவலுடன் முருகனை காண!!!அருணகிரிநாதர் திருப்புகழ்...
திருச்செங்கோடு
"வேலும் மயிலும் சேவலும் துணை"
அன்பாக வந்து, உன்தாள் பணிந்து,
ஐம்பூதம் ஒன்ற ...... நினையாமல்,
அன்பால் மிகுந்து, நஞ்சுஆரு கண்கள்,
அம்போருகங்கள் ...... முலைதானும்,
கொந்தே மிகுந்து வண்டு ஆடி நின்று
கொண்டாடுகின்ற ...... குழலாரைக்
கொண்டே நினைந்து, மன் பேது மண்டி
குன்றா மலைந்து ...... அலைவேனோ?
மன்றுஆடி தந்த மைந்தா! மிகுந்த
வம்புஆர் கடம்பை ...... அணிவோனே!
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த ...... வடிவேலா!
சென்றே இடங்கள் கந்தா எனும் பொ
செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும்.
செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த
செங்கோடு அமர்ந்த ...... பெருமாளே.
"வேலும் மயிலும் சேவலும் துணை"
குறிப்பு : (சென்றே இடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல் கொண்டு வரவேணும் ---
அடியேன் செல்லும் இடங்களில் எல்லாம் கந்தா!!!!! என்று அழைக்கும் போது செஞ்சேவல் கொண்டு வரவேணும்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக